Tiruchirappalli

News April 18, 2024

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

திருச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

திருச்சியில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

News April 18, 2024

திருச்சி: பள்ளி மாணவர் தற்கொலை

image

தென்னூர் அண்ணா நகர் பாரதி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (18), பிளஸ்டூ படித்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு அதில் இடது கையில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு அடிக்கடி கடுமையான வயிற்று வலி வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர் .

News April 18, 2024

வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியை தேடி மக்கள்,

image

கோடை வெயிலை சமாளிக்க, இன்று காலை வயலூர் ரோடு, பிஷப்ஹீபர் கல்லூரி சாலை, சீனிவாசா நகர், பகுதிகளில், நொங்கு ,மற்றும் நொங்கு தண்ணீர் , விற்பனை சூடு பிடித்துள்ளது, 10 ரூபாய்க்கு,2, 20 ரூபாய்க்கு, 5என்று விற்றாலும், ஆரோக்கியமான குளிர்ச்சி தரும், பொருள் என்பதால், மக்கள் விருப்பமுடன் வாங்கிச் செல்கின்றனர். காலையி 9 மணிக்கு கொண்டுவரும் நொங்கு, மதியம் 2மணிக்குள் விற்று விடுகிறது.

News April 18, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; தலை நசுங்கி பலி

image

திட்டக்குடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் நிவேதிதா ஆகிய இருவரும் நேற்று டூவீலரில் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது கூத்தூர் மேம்பாலம் அருகில் வந்தபோது இடது புறத்தில் உள்ள பாலக்கட்டையில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் வலது புறத்தில் சென்ற தனியார் பேருந்தில் அடிபட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

News April 18, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; தலை நசுங்கி பலி

image

திட்டக்குடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் நிவேதிதா ஆகிய இருவரும் நேற்று டூவீலரில் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது கூத்தூர் மேம்பாலம் அருகில் வந்தபோது இடது புறத்தில் உள்ள பாலக்கட்டையில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் வலது புறத்தில் சென்ற தனியார் பேருந்தில் அடிபட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

News April 18, 2024

திருச்சி அரசு மருத்துவமணையில் புதிய வார்டு தயார்.

image

திருச்சி வெப்பநிலை உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். அளவுக்கு அதிகமான வெப்பநிலையை உடல் தாங்கிக் கொள்ள முடியாத போது தலைவலி சோர்வு மயக்கம் போன்றவற்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ,படுக்கை வசதியுடன் கூடிய புதிய வார்டு தயார் நிலையில் உள்ளது. என்று திருச்சி தலைமை மருத்துவர், செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

News April 17, 2024

திருச்சி: ஆட்சியரகத்தில் இறுதி குலுக்கல்.!

image

திருச்சி தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் ஆகியோரின் தலைமையில், இன்று அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

News April 17, 2024

திருச்சி: தந்தையிடம் வாழ்த்து பெற்ற துரை வைகோ

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மறுமலர்ச்சி திமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான, இன்று மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேரில் சந்தித்து தேர்தல் பரப்புரை பயணம் தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் அவரிடம் வாழ்த்து பெற்று கொண்டார். இந்நிகழ்வில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

திருச்சி அருகே விபத்து; 5 பேரின் நிலை?

image

எடப்பாடியிலிருந்து கும்பகோணம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.திருச்சி திருவானைக்காவல் அருகே பஸ் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு உரம் முட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர்.அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

error: Content is protected !!