India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி சிவா, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது நாட்டின் அவசியத் தேவையாக உள்ளது. ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் தேடும்போது நாங்கள் ‘இந்தியா’ கூட்டணியை முன்னிலைப்படுத்தி அளித்த வாக்குறுதிகளை ஏற்றுள்ளனர். குறிப்பாக, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் பிறந்தநாள் இன்று அதிமுக ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அதிமுக அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சிந்தாமணி முத்துக்குமார் பிரம்மாண்ட போஸ்டர் அடித்து கொண்டாடினார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் மாதா கோயில் பகுதியில் சேர்ந்த அருண்ராஜ்(41 ) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாளன், சங்கர் ,ரமேஷ் உள்ளிட்டோருக்கு இடையே முன்விரோதம் இருந்து கட்டையால் தலையில் தாக்கியதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு லால்குடி போலீசார் விசாரணை
திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேங்கை வயல் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அதனால் ஒரு சிலர் மட்டுமே வாக்களித்தனர்.இந்நிலையில், மீண்டும் வேங்கை வயலில் மறு வாக்குப்பதிவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் செயின்ட் ஜான் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் National Defence Academy and Naval Academy and Combined Defence Services Examination (I) 2024 ஆகிய தேர்வுகள் நடைபெறுவதை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நேற்று ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது, திருச்சி, நாடாளுமன்ற தொகுதியில் 67. 52சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன. பெரும்பாலான மக்கள் வாக்களிக்க வராததால் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று கூறினார்.
அரியமங்கலத்தை சேர்ந்த தனுஷ்ராஜ் (22). தனது நண்பரான தென்னூர் பாரதி நகரை சேர்ந்த மணிகண்டனுடன் நேற்று டூவீலரில் சென்றபோது, எதிரில் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சரண் (22), தனது நண்பரான சச்சினுடன்(22) டூவீலரில் வந்த டூவீலர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த தனுஷ்ராஜ் , மணிகண்டன், சச்சின் ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார் .
முசிறி அடுத்த அயித்தாம்பட்டியை சோ்ந்த தமிழ்ச்செல்வன். திருவெறும்பூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை பணியில் இருந்த இவா் நேற்று பணி முடித்து தனது டூவீலரில் சென்ற போது ஏவூா் கருப்பு கோயில் அருகே சென்றபோது டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையறிந்த முசிறி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தமிழகம் முழுவதும் 69. 46 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த தேர்தலை விட இது மூன்று சதவீதம் குறைவு. அந்த வகையில் திருச்சியில் இன்று மாலை இறுதி கட்ட தகவலின் படி 67.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்றைய இரவு அறிவிப்பை விட இந்த அறிவிப்பில் ஒரு சதவீதம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 72.87 சதவீதமும், திருச்சி மேற்கு தொகுதியில் 61.75 சதவீதமும், திருச்சி கிழக்கு தொகுதியில் 62.46 சதவீதமும், திருவெறும்பூர் தொகுதியில் 66.62 சதவீதமும், கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 73.80 சதவீதமும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 68.32 என திருச்சி தொகுதியில் 67.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.