India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி தமிழ்நாடு பார்மா டிஸ்ட்ரிபியூஷன் அசோசியேஷன் சார்பில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஜிஎஸ்டி பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.மாநிலத் தலைவர் சிதம்பரம் தலைமையில் பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்க அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம் துணைத் தலைவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சேலத்தைச் சேர்ந்த மூத்த வரி ஆலோசகர் ஆடிட்டர் ராஜ பாலு கலந்துகொண்டு ஜிஎஸ்டி பற்றி பேசினார்.
திருச்சியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயமான செயிண்ட் மேரீஸ் கேத்ரல் புனித மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் ஜேசுட் மிஷனரியான Fr.Louis Carnier என்பவரால் 1839இல் கட்டத் தொடங்கப்பட்டு 1841இல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தேவாலயம் கேத்திக் மற்றும் ரோமானஸ் பாணிகளில் கட்டப்பட்டுள்ளது. திருச்சியின் மையத்தில் அமைந்து நகருக்கு அழகு சேர்க்கிறது இத்தேவாலயம்.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 13371 மாணவர்களும், 16244 மாணவிகளும் மொத்தம் 29615 மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள். இதில் 12491 மாணவர்களும் 15863 மாணவிகளும் என மொத்தம் 28354 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.74 ஆகும். கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது. எனவே இது கடந்த ஆண்டை விட குறைவான தேர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரங்களை இன்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், அரசு பள்ளிகள் 14, அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 14, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 1, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் 47 என மொத்தம் 82 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது.
திருச்சி அண்ணாமலை நகர் பைபாஸ் சாலையில் வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் வணிக வளாக கட்டிடங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லை. இதனால் அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். எனவே வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத கட்டிடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மணப்பாறை வீரம்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 6.5.2024 முதல் 20.5.2024 வரை The Chief Instructor Combat Engineering Madras Engineer Group Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சூடும் பயிற்சி நடைபெறுகிறது. இதனால் மேற்கண்ட இடத்தில், மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் இன்று காலை சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும்”ரங்கா ரங்கா” என கோஷம் முழங்க பக்தர்கள் அனைவரும் நம்பெருமாலை வழிபட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸாரும் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், திருச்சி மாவட்டத்தில் 12,491 மாணவர்களும்,15,863 மாணவிகளும் என மொத்தம் 28,354 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 13வது இடத்திலிருந்த, திருச்சி மாவட்டம் தற்போது 12 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. திருச்சியின் தேர்ச்சி சதவிகிதம் 95.74.இது கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது.
Sorry, no posts matched your criteria.