India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொட்டியம் அடுத்த தோளூர்பட்டி ஊராட்சி திருச்சி நாமக்கல் சாலையில் அமைந்துள்ள பெரியார் சமத்துவ புறத்தில் நேற்று வீட்டுக்குள் புகுந்த 15 அடி நீளம் உள்ள பாம்பை அடித்துக் கொன்ற வீட்டின் உரிமையாளர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெறும் காட்டுப்பகுதி என்பதால் வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடித்துக் கொண்டனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரூப்1 முதல் நிலை தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து போட்டி தேர்வர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி நடைபெற்றன. அதில் ரொக்க பணமாக ரூபாய் 1 கோடியே 06 லட்சத்து 20ஆயிரத்து 548, தங்கம் 2 கிலோ 150 கிராம், வெள்ளி 3 கிலோ 580 கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 103, அயல்நாட்டு நாணயங்கள் 489 கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல் தொழிற்சாலையில் பொதுமேலாளராக பணியாற்றிய சண்முகம் சுட்டுக்கொண்டு இறந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை. அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பதும், சண்முகம் டெல்லியில் பணியாற்றியபோது அந்தத் துப்பாக்கியை வாங்கி இருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கி இருக்கிறார் என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணேசபுரம் 8வது தெருவை சேர்ந்த சண்முகம் (50) என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அலுவலகத்திற்குள் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் இவரது உடலை கைப்பற்றி கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியமங்கலம் பெரியார் தெரு அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்(50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் காயத்துடன் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்துள்ளார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர்
உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் தன் பக்தர்களை பிள்ளைகளாக எண்ணி 48 நாட்களுக்கு பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச்.9-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வை முன்னிட்டு அடுத்து வரும் 7 வாரங்களுக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதுவே தமிழகத்தின் மிகப்பெரிய பூச்சொரிதல் விழாவாகும். இந்நிகழ்வில் அம்மனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். SHARE NOW!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பதிவு முகாம் இன்று காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை திருவரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் 21 வயதில் இருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம் விவரங்களுக்கு 9443644967 ஐ அழைக்கலாம்.
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று (10.03.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், உதவித் தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 645 மனுக்கள் பெறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.