India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(38). இவர் இன்று காலை துறையூர் பெரிய ஏரி பகுதியில் விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணறு ஒன்றில் சரவணன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(38). இவர் இன்று காலை துறையூர் பெரிய ஏரி பகுதியில் விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணறு ஒன்றில் சரவணன் தவறி விழுந்து பரிதமாக உயிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட TVS டோல்கேட் பகுதியில், “TVS டோல்கேட்” என அழைக்கப்படுவதனை மாற்றி, “கலைஞர் டோல்கேட்” எனப் பெயர் மாற்றம் செய்திட உத்தேசிக்கப்பட்டதை, மேற்படி இடம் தொன்று தொட்டு டி.வி.எஸ். டோல்கேட் என அழைக்கப்பட்டு வருவதால், மேற்படி இடம், தற்போதுள்ள “TVS டோல்கேட்” என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் எனத் மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட தென்னூர், லால்குடி, ராஜாஜி நகர் அஞ்சலகங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, 3 அஞ்சலகங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் ஏப்.1-ம் தேதி முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என திருச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் துறையில் திட்ட உதவியாளர் ஒரு காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.25க்குள் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியில்: rajaramdms@bdu.ac.in விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரமங்கலம் கிராமத்தில் கடந்த 29.08.2019 ஆம் தேதி சற்று மனநிலை சரியில்லாத 15வயது குழந்தையை கொண்டு சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபர் தொடர்பான வழக்கு, திருச்சி மகிழா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி ஸ்ரீவத்சன், சம்மந்தப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 பணமும் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கினார்.
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தமிழக அரசின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை அணுகி கூடுதல் தகல்வல்களை தெரிந்து கொள்ள அருவுறுத்தப்படுகின்றனர். இதனை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்…
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 21173 ஆகும். அதில் இன்று நடைபெற்ற தேர்வில் 20688 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் ஆண்களில் 323 பேர் பெண்களில் 162 பேர் என மொத்தம் 485 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி பிரிவின் சார்பாக வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீச்சல் பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏப்ரல் 1 முதல் 12 வரை முதல் வரை முதல் பேஜ் ஆரம்பமாக உள்ளது திருச்சி மாவட்ட விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.