Tiruchirappalli

News October 22, 2024

பச்சைமலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டம்

image

துறையூர் அடுத்த பச்சைமலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி என்ற ஊரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் மூலம் டோம் வடிவிலான தங்குமிட வசதி மற்றும் ஜிப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவுவதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பச்சைமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துவர் என கருதப்படுகிறது.

News October 22, 2024

திருச்சி பிஹெச்எல்லில் வேலை வாய்ப்பு

image

திருச்சி பிஹெச்எல்லில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 650 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஏ, பிகாம் மற்றும் பிஇ, பிடெக் படித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்கள். இதற்கு விண்ணப்பிக்க 23-10-24 அன்று இறுதி நாளாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.trichybhel.com என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்

News October 22, 2024

பணியில் ஒழுங்கீனம்: 2 காவலர்கள் சஸ்பெண்ட்

image

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சரியாக பணிகளில் ஈடுபடாத 2 காவலர்களை பணியிட நீக்கம் செய்து காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன் மதுபோதையில் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் ஏட்டு கொள்ளிடம் செக் போஸ்ட்க்கு செல்லாமல் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் டி.எஸ்.பி. நிவேதா லட்சுமி பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

திருச்சி மாவட்டத்தில் இடியுடன் மழை

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,திருச்சி மாநகர், துறையூர், முசிறி, லால்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.

News October 22, 2024

சிட்கோவில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருச்சி, வாழவந்தான் கோட்டை மற்றும் கும்பக்குடி கிராமம், மணப்பாறை சத்திரப்பட்டி மற்றும் கண்ணுடையான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழில்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது. எனவே புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News October 22, 2024

திருச்சி எஸ்பி வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

image

திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குறித்து நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறாக பேசிய வழக்கில் தில்லைநகர் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை தில்லை நகர் காவல் நிலையத்திலிருந்து, திருச்சி சைபர் கிரைம் விசாரணைக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News October 22, 2024

ஆட்சியரிடம் 411 மனுக்கள் வழங்கப்பட்டது

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 411 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், இலவச வீட்டு மனை பட்டா,பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்,இதர சான்றுகள்,குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

News October 22, 2024

திருச்சியில் 4198 பேர் தேர்வு எழுத உள்ளனர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொழில்நுட்ப பணிகள் தேர்வானது வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை திருச்சியில் 14 தேர்வு மையங்களில் 4198 தேர்வுகள் எழுத உள்ளனர். இந்த தேர்வு பணிகளுக்கென 14 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

சிறுகனூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

image

திருச்சி, சிறுகனூர் அருகே எம் ஆர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி (48) வயலுக்குச் நாத்து நடவு சென்ற போது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண் உடலை கைப்பற்றிய போலீசார் பின்னர் பிரசோத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 21, 2024

கடவுச்சீட்டில் முறைகேடு: மூன்று பேர் கைது

image

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திருச்சி விமான நிலையம் சனிக்கிழமை வந்தடைந்தன. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்தபோது புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன், நாகப்பட்டினத்தை சேர்ந்த அம்மாசி, புத்தாநத்தத்தை சேர்ந்த உபயத்துல்லா ஆகிய 3 பேரின் ஆவணங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து 3 பேரையும் விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.