Tiruchirappalli

News June 26, 2024

திருச்சி முதல் பெங்களூர்.. வந்தே பாரத் சேவை!

image

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்போது, மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News June 25, 2024

கல்லூரி விடுதிகளில் சேர அழைப்பு

image

திருச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் (ம) சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், தகுதிகளாக பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.மேலும், தகுதியுடைய நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பயன்பெற ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

திருச்சி முதல் பெங்களூர்.. வந்தே பாரத் சேவை!

image

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்போது, மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News June 25, 2024

மணப்பாறை: பள்ளி கட்டுமான பணிகள் ஆட்சியர் ஆய்வு

image

மணப்பாறையை அடுத்த கரையாம்பட்டி கிராமத்தில் குழந்தை நலன் மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 32.8 லட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிய மற்றும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் ஆய்வு செய்தார்.

News June 25, 2024

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 25, 2024

திருச்சி எம்பி ஆனார் துரை வைகோ

image

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 24, 2024

திருச்சியில் 2 ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

திருச்சியில் கடந்த 3.6.2024ம் தேதி லாரி ஆபீஸில் வேலை பார்க்கும் பணியாளர் கழுத்தில் அருவாள் வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாபு, தேவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், ரவுடி பாபு என்பவர் மீது காவல் நிலையங்களில் 26 வழக்குகள் மற்றும் ரவுடி தேவா மீது 32 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால் இவர்களை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

News June 24, 2024

திருச்சி ஒரே நாளில் குவிந்த மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 1076 மனுக்கள் வருகை தந்தது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை ,நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

News June 24, 2024

86 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்.!

image

திருச்சி ஆட்சியரகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.3000 மதிப்பிலான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி 6 நபர்களுக்கும், ரூ.9.250 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி 1 நபருக்கும்,78 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் வழங்கினார்.

News June 24, 2024

திருச்சியில் ஆசிரியர்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்னாள் உறுப்புக் கல்லூரியின் ஆசிரியரின் சங்கம் போராட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், 116 ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு 7 மாத ஊதியம் வழங்கக்கோரி ஜூலை 27,28இல் கல்லூரிகளுக்கு கருப்பு பட்டையுடன் செல்வது, ஜூலை 30 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் என அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!