India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள், உரிய ஆவணங்களுடன் https://tinyurl.com/panchayataward என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி, தென்னூர் அண்ணா நகர் பகுதியில், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், சாலையோர பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டது. செல்பி பாயிண்டுடன் கூடிய இப்பூங்கா பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16989920>>(பாகம்-2)<<>>
▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
பேங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக நேற்று (ஜூலை.07) இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.
சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க, 75 % மானியத்தில், ரூ.7,500 மதிப்புள்ள காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.