India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் பேஸ்ட் வடிவிலான 24 கேரட் தங்கம் 234 கிராம் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 18 லட்சத்து 24 ஆயிரத்து 30 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
புறத்தாக்குடி அடுத்த மகிழம்பாடியைச் சேர்ந்த ஹென்றி ராஜ், தச்சன்குறிச்சி VAO-வாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பாத்ரூம் செல்லும் போது வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் அடிபட்டது. பின்னர் சிகிச்சைக்காக சென்ற போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த முகமது அப்பாஸ் அம்பேத்கர் நகர் மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை சேர்ந்த பக்கிரி சாமி, தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகரன், பாண்டி, மதுரை மேலூரை சேர்ந்தவர் மகேஷ், ஆகியோர் வெவ்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்கள். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் போலி ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்து ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 28ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக மையத்தின் தலைவர் சிபி தாமஸ் நேற்று தெரிவித்துள்ளார். எனவே இதில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி பயிற்சியில் சேரலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
திருச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவருமான செல்வ பெருந்தகை அளித்த பேட்டியில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்தியா கூட்டணி பற்றி பேச எச்.ராஜாவிற்கு தகுதி இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடத்தை விட்டு விட்டு பாடியவர்கள் தான் சீமான் விமர்சிக்க வேண்டும் ஆனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்களை விமர்சிக்கிறார் என்று கூறினார். COMMENTIT
திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த முகாம் வாய்ப்பைத் தவறவிட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கோரிக்கை வைத்துள்ளார்.
சிறுகனூர் அருகே நெய்க்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகள் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என மாணவி தந்தையிடம் கேட்டு தராததால், எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் இன்று திருச்சி எஸ்.பி வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இதனால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், முதல் கட்ட மேம்பாட்டிற்காக 50 கோடி ரூபாய் செலவில் 47 ஏக்கர் நிலத்தில் பணிகள் அனைத்தும் தொடங்க நிலம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.