India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 26) முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொடி நாள் நிதியில் அதிக வசூல் புரிந்தமைக்காக துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷாவிற்கு வெள்ளி பதக்கமும், முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தை சேர்ந்த 13 வீரர் மற்றும் வீரங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த பிருத்திவிராஜ் தொண்டைமான் துப்பாக்கி சுடும் போட்டியிலும், சுபா. வெங்கடேசன் தடகளபோட்டியிலும் கலந்துக் கொள்ள உள்ளனர். இவர்கள் வெற்றி பெற வேண்டுமென திருச்சி மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் திரு. சேமலையப்பன் அவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கேயத்தில் அமைந்துள்ள சேமலையப்பன் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
திருச்சி உறையூரில் உள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் ஆலயத்தில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர் வெக்காளியம்மன் தரிசனம் செய்துவிட்டு திருவானைக்காவல் மற்றும் சமயபுரத்திற்கு செல்ல உள்ளார். இதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஹரியானா மாநிலத்திலிருந்து திருச்சிக்கு சரக்கு ரயில்கள் முதன்முறையாக 25 வேகன்களில் 5,346 இயந்திரங்களை புதன்கிழமை ஏற்றியுள்ளது. இந்த சரக்கு போக்குவரத்து மூலம் 16.57 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது திருச்சி ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு உத்தியின் அடுத்த இலக்காக அமைந்துள்ளது என கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனை அருகே திருவிக நகரில் அமைந்துள்ள மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை தாக்கியதால் மண்டை உடைந்தது. இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி ஜி ஹெச் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காவலாளியை குடிபோதையில் தாக்கிய மூன்று பேரை கைது செய்து பாஜக அலுவலக பாதுகாப்பை பலப்படுத்தினர்.
திருச்சியில் வரும் 27ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என கூறி மத்திய அரசை கண்டித்து நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ளுமாறு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் மத்திய மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திருச்சியில் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா சென்று வந்தவரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் இன்று கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த அறிவழகன் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமி கிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் ஆறாம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்டு ஏழாம் தேதியும் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என்று ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
திருச்சி அருகே தமிழக சுற்றுலா கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்ஆர்எம் ஹோட்டல் உள்ளது. குத்தகை காலம் முடிந்து விட்டதால் இடத்தை காலி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹோட்டல் நிர்வாகம் கோர்ட்டில் மனு செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசாரின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனக் கூறி கோர்ட் வழக்கை இன்று ஒத்தி வைத்தது.
Sorry, no posts matched your criteria.