India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் திருச்சி முக்கொம்பு மேலனை பகுதியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நீர் வெளியேற்றம் குறித்தும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்புடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டத்தில் வாகன சோதனையில் 240 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியதாக ஸ்ரீநாத், செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் குட்கா பொருட்களை திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக விற்பனை செய்கிறோம் என ஒப்புக்கொண்டனர். இதனால் அவரின் நடவடிக்கையை தடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் இன்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்கள் நீராடுவதற்கான வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த ஆய்வின்போது, நீர்வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பதாகை வைக்கவும், பொது மக்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே இன்று மாலை ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதனை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்நிலையில் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், வெளியாட்களை அழைத்து வந்து மாணவனை வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற ஆசிரியர் சிவகுமாருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கரை சந்திக்க இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மற்றும் சி.வி சண்முகம் இன்று வருகை புரிந்தனர். அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் எம்பி குமார், முன்னாள் அரசு கொறடா மனோகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி கே.கே.நகர் தொடக்கப்பள்ளியில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறையின் மூலம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இணை சீருடையினை மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை, நேரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தங்கமணி மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்துடன் இணைந்து மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டிகளை வயலூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் வலுதூக்கும் போட்டிகள் நடந்தன. பென்ச்பிரஸ் கிளாசிக் டெட்லிப்ட் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில், ஆண்கள் பிரிவில் 175 பேரும், பெண்கள் பிரிவில் 80 பேரும் கலந்து கொண்டனர். பின்பு, பரிசுகள் வழங்கப்பட்டன.
விதை மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, விதைகளின் தரத்தினை உறுதி செய்து கொள்ள, திருச்சி விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார், “தமிழகத்தில், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மிதமான மழை பொழியும். இந்த மாதங்கள் தான் விவசாயத்திற்கான மாதங்களாக கருதப்படுகிறது. விவசாயிகள் விதைகளை வாங்கும்போது, விதை பரிசோதனை நிலையத்தில் அவைகளில் தரம் அறிந்து பரிசோதித்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரசை கூறுவது ஏற்புடையதல்ல என திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுக ஆட்சியில் நடக்கும் சம்பவங்கள், அரசியல் குற்றச் சம்பவங்கள் அல்ல” என தமிழகம் கொலை மாநிலமாக மாறியுள்ளதாகக் கூறிய இ.பி.எஸ். கருத்துக்கு விளக்கம் அளித்தார். உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.