Tiruchirappalli

News July 30, 2024

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வென்ற  திருச்சி அணி 

image

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி மதுரையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில் திருச்சி, உறையூர் எஸ்.எம்.பள்ளியும், ராஜபாளையம் பள்ளியும் மோதின. இதில்,  எஸ்.எம்.பள்ளி அணி 25-17, 27-25 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

News July 30, 2024

திருச்சி முக்கொம்பு வந்தாள் காவேரி தாய்

image

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால்  அதிகப்படியான நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவேரி நீர் இன்று மாலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முக்கொம்பு வந்தடைந்தது. இதனையடுத்து முக்கொம்புவில் இருந்து மடை திறக்கப்பட்டு காவேரி தாய் விவசாய நிலங்களை தேடி பயணிக்க தொடங்கினாள். காவேரி தாயை விவசாயிகள் மலர் தூவி வரவேற்று பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

News July 30, 2024

திருச்சியில் ஏழு இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கற்பகச் செல்வி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முசிறி, 6 ஆம் தேதி துறையூர், 9ஆம் தேதி ஸ்ரீரங்கம், 13ஆ தேதி, லால்குடி 16ஆம் தேதி திருச்சி கிழக்கு 20ஆம் தேதி, திருச்சி நகரம் 27ஆந் தேதி, மணப்பாறை அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

News July 30, 2024

திருச்சி எஸ்.பிக்கு கொலை மிரட்டல் – கைது

image

திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை பகிர்ந்து “திருச்சியில் யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

News July 30, 2024

ஆசிரியர் அரிவாள் வெட்டு – கண்டனம்

image

திருச்சி அருகே சிவக்குமார் என்ற ஆசிரியரை மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “பேனாக்களை எடுத்துச் செல்லும் வயதில், மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிகளுக்கு செல்வது ஏன்? மாணவர்கள் மனதில் வன்முறை அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கும் இடமாக தமிழக அரசு மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News July 30, 2024

திருச்சி காவல்துறை உதவி எண் அறிவிப்பு

image

பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை 9487464651 என்ற உதவி எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

2 வயது குழந்தை பலியான சோகம்

image

துறையூர் அடுத்துள்ள காஞ்சிரி மலைப் புதூர் பகுதியில் வசிப்பவர் சுரேஷ். இவருக்கு இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று சுரேஷின் தந்தை மாணிக்கம் குழந்தைகளுக்கு குளிர்பானம் வாங்கி வந்துள்ளார். குழந்தைகள் குளிர்பானம் என்று நினைத்து வீட்டில், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து குடித்ததால் 2 வயது குழந்தை வினிஸ் சம்பவ இடத்திலேயே மயங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News July 30, 2024

காவிரி ஆற்றில் வெள்ள தடுப்பு நடவடிக்கை

image

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் பரிசல், துறையூர் ரோடு, அக்ரஹாரம் மற்றும் உமையாள்புரம், செவந்தலிங்கபுரம் பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை வருவாய் துறை மற்றும் காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மேலே கூறப்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் குளிக்கவும், இறங்கவும், துணி துவைக்கவும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 30, 2024

காவிரி ஆற்றில் வெள்ள தடுப்பு நடவடிக்கை

image

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் பரிசல், துறையூர் ரோடு, அக்ரஹாரம் மற்றும் உமையாள்புரம், செவந்தலிங்கபுரம் பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை வருவாய் துறை மற்றும் காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மேலே கூறப்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் குளிக்கவும், இறங்கவும், துணி துவைக்கவும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 30, 2024

திருச்சி ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 1024 மனுக்கள் பெறப்பட்டது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

error: Content is protected !!