Tiruchirappalli

News October 26, 2024

திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியலை 100% தூய்மையாக்கும் பணியில் 1.87 லட்சம் வாக்காளா்கள் இரட்டை பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவாகி உள்ளவர்களுக்கு அறிவிப்பு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை பெற்றவர்கள் வாக்காளா்கள் படிவம் – யு அறிவிப்புடன் தங்களது விவரங்களை இணைத்து வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

திருச்சி மாவட்டத்தில் 2,346 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி உட்பட 14 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4,198 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 1,852 பேர் தேர்வு எழுதினர். 2,346 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News October 26, 2024

இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

image

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் சித்திக். இவர் எடமலைப்பட்டி புதுரில் அரவை ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில், கவிதா என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் கவிதா, மாவு அரைத்துக்கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கி சுழற்றியதில் தலைகுப்புற விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எ.புதூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News October 26, 2024

தேர்வுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேர்வு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளையும் அவர் பார்வையிட்டார்…

News October 26, 2024

திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

image

திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெரிதாக எதுவும் சிக்காத நிலையில், பின்னர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தை சோதனையிட்ட போது, ரூ.97ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News October 26, 2024

தேசிய சைபா் பாதுகாப்பு மாநாடு !

image

தேசிய சைபா் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இணைந்து நடத்தும் தேசிய சைபா் பாதுகாப்பு மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து திருச்சி சரக டிஐஜி எம். மனோகரன் பேசியதாவது விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே இணைய வழிக் குற்றங்களை தடுக்க முடியும் என்றார்.

News October 26, 2024

திருச்சியில் இன்று ஆசிரியர்களுக்கு குறைதீர்க்கும் முகாம்

image

திருச்சி சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தெரிவித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து இதில் கொள்ளலாம் என சிஇஓ தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் சிறை

image

திருச்சி லால்குடியை சேர்ந்தவர்கள் முத்தையன், கோபி. இருவரும் அண்ணன் தம்பிகள். வேலைக்கு சென்ற இடத்தில் தம்பி கோபியை நோயாளியான முத்தையன் கொலை செய்தார். இந்த வழக்கில் முத்தையனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொலை வழக்கில் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 26, 2024

மத்திய அரசு: திருச்சிக்கு முதலிடம்

image

மத்திய கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மாசுக் கட்டுபாடு வாரியம் ஒவ்வொரு வருடமும் காற்று மாசு குறித்து நகரங்களின் பட்டியலை வெளியிடும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான காற்று மாசு குறித்து நகரங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசு குறைவான நகரங்களின் பட்டியலில் திருச்சியின் பல்கலைப்பேரூர் முதலிடம் பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ளது.

News October 25, 2024

திருச்சியில் மூதாட்டி மர்மச்சாவு

image

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் கிராப்பட்டியை சேர்ந்த யாகுல மேரி என்ற மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவரது காதுகளில் இருந்த தோடுகள் அறுத்து எடுக்கப்பட்டிருந்தன. மேலும் அவரது தலையிலும் ரத்த காயங்கள் இருந்தன. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.