Tiruchirappalli

News October 28, 2024

மணப்பாறை அருகே ரயிலில் கால் சிக்கி மாணவருக்கு பலத்த காயம்

image

கருங்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜோஸ்வா தாமஸ். இவர் இன்று கல்லூரிக்கு செல்ல வையம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் போது நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையில் கால் சிக்கி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News October 28, 2024

திருச்சி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சொந்த ஊருக்கு செல்வோர் காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் திருச்சி ரயில் நிலையங்களில் தமிழக ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து திருட்டு உள்ளிட்ட குற்றத் தடுப்புப் பணிகளுக்காக சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

News October 28, 2024

திருச்சியில் கூடுதல் விமான சேவை

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தின் கொழும்பு – திருச்சி – கொழும்பு வான்வழியில் வருகின்ற 31/10/2024 அன்று கூடுதல் விமானசேவை உள்ளதாக வெளியிட்டுள்ளனர். இந்த தீபாவளி முதல் வாரத்திற்கு 8 சேவைகள் உள்ளதாக கூறியுள்ளனர். அதாவது வியாழக்கிழமைகளில் 2 சேவைகள் உள்ளது.

News October 27, 2024

திருச்சி அருகே போண்டாவில் 5 ரூபாய் நாணயம்

image

திருச்சி டி.வி.எஸ். பகுதியைச் சேர்ந்த ரத்தினம் நேற்று காலை நண்பர்களுடன் மைதானத்தில் ஹேண்ட் பால் விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மற்றும் போண்டா உள்ளிட்ட தின்பண்டங்களை நண்பர்களுக்கு வாங்கி வந்திருந்தார். அதனை நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து தின்ற போது ஒரு போண்டாவில் 5 ரூபாய் நாணயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

News October 27, 2024

இனி வாரத்திற்கு 8 விமான சேவைகள்

image

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் “கொழும்பு − திருச்சி – கொழும்பு” வான்வழியில் கூடுதல் விமானச்சேவை தற்போது வாரத்திற்கு 7 விமானச்சேவை உள்ள நிலையில், வரும் 31 ஆம் தேதி முதல் வாரத்திற்கு 8 சேவைகள். அதாவது வியாழக்கிழமைகளில் 2 சேவைகள், விரைவில் கூடுதல் சேவைகளை அறிவிக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

News October 27, 2024

திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் விபத்தில் பலி

image

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு சென்ற திருச்சியை சேர்ந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இதில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவரும் வழக்கறிஞருமான சீனிவாசன், தெற்கு மாவட்ட உறையூர் பகுதி தலைவர் கலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 27, 2024

சாலை விபத்தில் 2 விஜய் தொண்டர்கள் பலி

image

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் கவிழ்ந்ததில் சீனிவாசன், கலை ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News October 27, 2024

பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் திடீர் ராஜினாமா

image

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவராக இருந்த ஏ.ஆர்.பாட்ஷா பாஜகவின் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்ந்தார். பாஜகவின் மீது அளப்பரிய மதிப்பையும் அன்பையும் உருவாக்கி பல இஸ்லாமிய சகோதரர்களை பாஜகவிற்கு கொண்டு வந்தவர். இவர் இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாநில தலைவர் அண்ணாமலைக்கும், திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகருக்கும் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SHAREIT

News October 27, 2024

குறைவான காற்று மாசு: திருச்சி பல்கலை பேரூர் சாதனை

image

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகம்/குறைவான காற்று மாசுடைய நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட காற்று தரக் குறியீட்டில் (ஏ.க்யூ.ஐ.) பட்டியலில் சுத்தமான காற்றுடைய பகுதியாக திருச்சியின் பல்கலை பேரூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் 10 நகரங்களில் ராமநாதபுரம், மதுரை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

News October 27, 2024

ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்