Tiruchirappalli

News August 6, 2025

திருச்சி: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

image

(தாலுகா வாரியாக)
▶️ திருச்சி கிழக்கு – 01
▶️ திருச்சி மேற்கு – 04
▶️ திருவெறும்பூர் – 05
▶️ ஸ்ரீரங்கம் – 18
▶️ மணப்பாறை – 06
▶️ மருங்காபுரி – 07
▶️ லால்குடி – 22
▶️ மணச்சநல்லூர் – 08
▶️ முசிறி – 09
▶️ துறையூர் – 18
▶️ தொட்டியம் – 06 SHARE NOW !!

News August 6, 2025

திருச்சியில் தாழ்தள பேருந்துகள் விரைவில் அறிமுகம்

image

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, சேலம், நெல்லை மாநகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மண்டலத்துக்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று பெற்றவுடன் இந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

திருச்சி: விரைவில் வீடு தேடி வரவிருக்கும் ரேஷன் பொருட்கள்

image

தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சில மாவட்டங்களில் சோதனை ஓட்டமாக நடத்தப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 70,566 கார்டுதாரர்களுக்கு, 800 வாகனங்கள் மூலம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 6, 2025

திருச்சி: வங்கி வேலை பெற கடைசி வாய்ப்பு

image

திருச்சி மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே க்ளிக் <<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

News August 6, 2025

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவிந்த 2968 மனுக்கள்

image

திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அதில் திருச்சியில் 895 மனுக்களும், துறையூரில் 194 மனுக்களும், புள்ளம்பாடியில் 552 மனுக்களும், தாளக்குடியில் 260 மனுக்களும், தண்டலைப்புத்தூரில் 541, முருங்கையில் 526 மனுக்களும் என மொத்தம் 2968 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

திருச்சியில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

image

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை <>http://tiruchirappalli.nic.in<<>> என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஆக.,19ஆம் தேதிக்குள் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News August 6, 2025

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஆக.,19-ம் தேதி காலை 8:10 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம் மட்டும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் இயக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

திருச்சி: குழந்தை பாதுகாப்பு அலகில் பணியாற்ற அழைப்பு

image

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை http://tiruchirappalli.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஆக.,19ஆம் தேதிக்குள் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

திருச்சி: அமைச்சரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள்

image

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் ஊடகச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனை திருச்சி டிஸ்ட்ரிக்ட்பிரஸ் & மீடியா கிளப், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம், கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம், தமிழக நிருபர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று மாலை நேரில் சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்தனர்.

News August 5, 2025

திருச்சி: பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கு குருவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!