India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போதைப் பொருட்களுக்கு எதிரான மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா, திருச்சி எம்.ஐ.டி கல்லூரியில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் இந்த உறுதிமொழியினை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் இன்று இரவு அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்களை Save பண்ணிக்கோங்க. மாநில உதவி எண்-1070, மாவட்ட உதவி எண்-1077, அவசர மருத்துவ உதவி-104. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை வெளிப்படுத்தியதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், நாளை (ஆக.11) திருச்சி மாநகரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <
உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
திருச்சி, லால்குடி அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாராந்தர தேர்வுகள் வரும் ஆக.,11-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனை பள்ளி பாடவேளையில் நடத்த கூடாது. மாறாக இதனை சிறப்பு வகுப்பு நேரம், உணவு இடைவேளை நேரம் மற்றும் காலை நேரத்தில் நடத்த வேண்டும் என திருச்சி மாவட்டக்கல்வி அலுவலர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
✅இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மாவட்டத்தில் காலியாக உள்ள 143 செவிலியர், 11 ஆய்வக நுட்புநர், 5 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் ஆக.,21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.