Tiruchirappalli

News September 18, 2025

திருச்சி: கோளரங்கத்தில் கேளிக்கை கூடம் தொடக்கம்

image

திருச்சி அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பொருத்தப்படும் 30 வித கேளிக்கை உபகரணங்கள் மூலம் அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இதன் பணிகள் விரைவில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

திருச்சி: ரயில் பயணி தவறவிட்ட செல்போன் மீட்பு

image

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் அமானத்” என்ற முன்னெடுப்பின் கீழ், ரயில் பயணிகள் தவறவிடும் பொருட்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட செல்போனை ஆர்.பி.எப் காவலர்கள் மீட்டு, உரிய அடையாளங்களை கேட்டறிந்து பயணியிடம் ஒப்படைத்தனர். மேலும் ரயில் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

News September 18, 2025

திருச்சியில் பதிவான மழை அளவு

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டிதீர்த்தது. அதேநேரம், திருச்சியில் அதிகபட்சமாக மணப்பாறை பொன்னனியார் அணைக்கட்டு பகுதியில் 44.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது, ஏர்போர்ட் பகுதியில் 21 .2 மிமீ மழை பதிவானது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 316.2 மிமீ மழையும், சராசரியாக 13. 18 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

News September 18, 2025

திருச்சி: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

image

திருச்சி மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

திருச்சி: கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

image

திருச்சி கொட்டப்பட்டில் செயல்பட்டுவரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சிமையத்தில், ஆடுவளர்ப்பு பயிற்சி 22.09.2025 அன்றும், நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 25.09.2025 அன்றும், கறவைமாடு வளர்ப்பு பயிற்சி 26.09.2025 அன்றும் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மக்கள் ரூ.590/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

News September 18, 2025

திருச்சியில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

நமது திருச்சியில் இன்று 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்
1.கூத்தப்பர்
BHEL குடியிருப்பு வளாகம், கைலாசபுரம்
2.கல்லக்குடி
டால்மியா மக்கள் மன்ற திருமண மண்டபம், கல்லக்குடி
3.மணிகண்டம்
சமுதாயக்கூடம், அதவத்தூர்
4.வையம்பட்டி
மாரியம்மன் கோவில் அருகில், நடுப்பட்டி
5.தா.பேட்டை
அரசு மேல்நிலைப்பள்ளி, பைத்தம்பாறை
6.உப்பிலியபுரம்
RKN திருமண மண்டபம், எரக்குடி
SHARE பண்ணுங்க!

News September 18, 2025

திருச்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

image

திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் அருகே உள்ள கண்ணாக்குடியை சேர்ந்த மாதவன் (26), நேற்று தனது வயல்வெளியில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றிவிட்டு அருகில் இருந்த கிணற்றில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளார்.‌ அப்போது நிதைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 18, 2025

திருச்சியில் இன்று Power Shutdown

image

திருச்சி மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது திருச்சியில்
Power Cut பகுதிகள் இதுதான்!
1.கே.சாத்தனுர்,
2.திருவானைக்காவல்,
3.வராகநேரி,
4.தென்னுர்,
இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 18, 2025

திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை – கலெக்டர்

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அனியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

திருச்சி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!