India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான போட்டிகள் நவ.19 அன்றும், 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான போட்டிகள் நவ.20 அன்றும் திருவாரூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரை வழங்குவதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருவாரூர் வருகை தருகிறார்.
மன்னார்குடியில் நவம்பர் 16,17 ஆகிய இரண்டு தினங்களில் 285 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் ஜனவரி 2025ஐ அடிப்படையாகக் கொண்டு 18 வயது எட்டும் அனைவரும் புதிய வாக்காளராக சேர பதிவு செய்யலாம். மேலும் பெயர், முகவரி திருத்தம், நீக்கல் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். முகாமானது மாவட்டம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். ஷேர் செய்யவும்
பெற்றோரை இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக மூலம் கண்டறிந்து, குடும்ப சூழ்நிலைகு ஏற்றவாறு பராமரிப்பு திட்டத்தின் மூலம் தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்குமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 310, 3வது தளம், திருவாரூர் என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்ட சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுதாகர் மீது மாவட்டம் முழுவதும் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது என்பதும், கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்று பிணையில் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் வரும் நவ.16 (சனி) அன்று நடைபெற உள்ளது. இதனால் திருவாரூர், கூடூர், அலிவலம், ஓடாச்சேரி, சேந்தமங்கலம், விஜயபுரம், வாலவாய்க்கால், மாங்குடி, கூடூர், திருக்கணமங்கை, பெரும்பண்ணையூர், விளமல், ஈ.பி.காலனி, தென்றல் நகர், மாங்குடி, பவித்திரமாணிக்கம், அடியக்கமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி/கைம்பெண் மற்றும் திருமணம் ஆகாத மகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதற்கு தகுதியாக குறைந்தது 3 மாதம் தையல் பயிற்சி பெற்றவராகவும், இதற்கு முன்னதாக மத்திய/மாநில அரசுகளிடமிருந்து இலவச தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு தொலைபேசி எண்: 04366-290080.
திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் பணி ஆனது கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணியானது நிறைவு பெற்று விட்டது. அதன் காரணமாக (நவம்பர்-14 )இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண வசூல் பயன்பாட்டிற்கு வருவதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரடாச்சேரி அடுத்த கூத்தாநல்லுார் பண்டுதக்குடி தமிழர்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (68 ). இவரை 3 நாட்களாக காணவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் அவரது மகன் ரமேஷ் தேடிப்பார்த்துள்ளார். இந்நிலையில் பண்டிதக்குடி பகுதியில் ஓடும் வெண்ணாற்றில் நடராஜன் இறந்து கிடப்பது தெரியவந்தது. குளிக்கச்சென்ற போது நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மன்னார்குடி அருகே சமுதாயம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் அவர்களது மகன் ஆகாஷ். இவர் தென்பரை அக்ரஹாரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு வண்ணம் அடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் சமுதாயம் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.