Thiruvarur

News September 8, 2024

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீடாமங்கலம் வருகை

image

முன்னாள் உள்துறை செயலாளரும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும் ஆன கோபால் சாமி நீடாமங்கலம் திருமண வரம் அருளும் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 08.09.2024 மாலை 5 மணியளவில் சுவாமி தரிசனம் செய்தார். பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சந்தன ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News September 8, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த 30 குடும்ப உறுப்பினர்கள்

image

கோட்டூர் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் இருந்து 30 குடும்பங்கள் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இன்று இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்நாதன், ஒன்றிய பெருந்தலைவர் என்.மணிமேகலை முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ.மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 8, 2024

நன்னிலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

நன்னிலம் தாலுகா குடவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

News September 8, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 431 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

image

திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பில் 431 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கு வெவ்வேறு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. வருகின்ற 15ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் ஊர்வலத்துடன் விநாயகர் ஊர்வலம் நிறைவடைய உள்ளது.

News September 8, 2024

திருவாரூரில் விளையாட்டு போட்டிகள் தொடக்க தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற செப்.10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள். அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

News September 8, 2024

மன்னார்குடி கான்ட்ராக்டருக்கு ரூ.15.65 லட்சம் அபராதம்

image

மன்னாா்குடியை சேர்ந்தவர் முகமது நஸ்முதீன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட, கட்டட ஒப்பந்ததாரா் எம். தனசேகா் என்பவரிடம் பல்வேறு தவணைகளாக ரூ. 21.20 லட்சம் கொடுத்துள்ளாா். பணத்தை பெற்று கொண்ட ஒப்பந்ததாரர் பணிகளை முடிக்காமல் பாதியிலே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நஸ்முதீன் தொடர்ந்த வழக்கில் ஒப்பந்ததாரருக்கு ரூ.15.65 லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்தது.

News September 8, 2024

திருவாரூர் அருகே ரயிலில் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது

image

கடலூா் பகுதியைச் சோ்ந்த சிவகாமி (31) திருவாரூா் மடப்புரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு ரயிலில் ஊர் திரும்பும் போது பூந்தோட்டத்தில் அவரிடமிருந்து மா்ம நபா் 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து, விசாரித்த திருவாரூர் ஆர்.பி.எஃப் போலீசார் திருவிடைமருதூரை சோ்ந்த ஞானப்பிரகாஷ் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

News September 7, 2024

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

image

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரியும், சமீபத்தில் உயர்த்திய சுங்க வரி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேரூந்து நிலையம் எதிரில் இன்று நடைபெற்றது. இதில் எம்பி வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

News September 7, 2024

கொரடாச்சேரி அருகே கார் மோதி முதியவர் பலி

image

கொரடாச்சேரி அருகே பொதக்குடியை சேர்ந்தவர் அமானுல்லா (70). முட்டை வியாபாரம் செய்து வந்த இவர் நேற்று முன் தினம் இரவு தனது மொபட்டில் முகுந்தனூர் என்ற இடத்தில் முட்டைகளை வாங்கிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை நோக்கி வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் அமானுல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 6, 2024

திருவாரூர் மாவட்டம் காவல்துறை ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!