India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் புகழ்பெற்ற என்கண் முருகன் கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
2023-24 கல்வியாண்டு NMMS தேர்ச்சி விழுக்காட்டில் 30வது இடத்தில் இருந்து, 2024- 25 ஆம் கல்வியாண்டில் 20 வது இடத்திற்கு, மாவட்ட கல்வி மேம்பாட்டு திட்டத்தின் விளைவாக முன்னேறி உள்ளோம். இந்த முன்னெடுப்பில் பங்கு கொண்ட மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள், கருத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியல் அகாடமி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தாட்கோ மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)
திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று பக்த காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் நண்பர்களுடன் சாமி கும்பிடுவதற்காக நேற்று வந்தார். இந்நிலையில் தியாகராஜ சாமி கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் இறங்கியவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
மன்னார்குடியை சேர்ந்தவர் ராமன். இவர் நேற்று இரவு தனது டூவீலரில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ராமர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் இன்று காலை ருக்மணி பாளையம் சாலையில் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணையில் அது ராமர் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து விபத்தா? கொலையா? எனும் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் இங்கே <
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் சரவணன் (47) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பெற்றோர் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஏப்.12) மதியம் 2 மணியளவில் வாலிபால் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு திருவாரூர் அருகில் உள்ள அம்மையப்பன் குளோபல் கலைக் கல்லூரியில் இலவச சேர்க்கை, உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாலிபால் விளையாடும் உங்க நண்பருக்கு இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Sorry, no posts matched your criteria.