India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டை செங்காங்காடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் மகேந்திரன்(50) இன்று காலை அலையாத்திகாட்டை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது திடீரென்று தவறில் கடலில் விழுந்து மூழ்கி பலியானார். இதனையடுத்து போலீசார் மீனவரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, 100 நாள் அட்டை உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு காவல் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு தனிப்பிரிவு காவலர்கள் பொது மக்களுடன் பழகி ரகசிய தகவல்களை முன்கூட்டியே சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல்களை அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டது. விரல்ரேகைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு குற்ற வழக்குகளில் தடயங்களை சேகரித்து உடனுக்குடன் மாநில குற்ற ஆவணத்துடன் ஒப்பீடு செய்ய அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் திருவாரூர், மன்னார்குடி கோட்ட அளவிலான கூட்டமானது நாளை மறுதினம் (7ஆம் தேதி) திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருவாரூரில் தந்தை மீது போடப்பட்ட போக்சோ வழக்கை வாபஸ் வாங்க கூறி, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய அதிமுக வார்டு செயலாளர் நேற்று கைது செய்யப்பட்டார். மனைவி மீனாட்சிக்கும் பாலாஜிக்கும் அடிக்கடி தகவல் ஏற்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே உள்ள வழக்கை வாபஸ் வாங்க கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 187 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி குணசுந்தரி என்பவர் 15. 1/2 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு காணாமல் போனதாக பொய் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குணசுந்தரி பொய் புகார் அளித்துள்ளதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு புகைப்படத்துடன் கூடிய தன்விவரகுறிப்பினை 15ஆம் தேதிக்குள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். 30ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி குணசுந்தரி என்பவர் 15 1/2 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு காணாமல் போனதாக பொய் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குணசுந்தரி பொய் புகார் அளித்துள்ளதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வார இறுதி நாட்களில் (2/11/24 & 3/11/24) காவல்துறையினரை ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய அதிரடி வேட்டை நடத்தியதில் 74 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையில் 9 பேரும், கள்ளத்தனமாக மது விற்பனையில் 27 பேரும், பணம் வைத்து சீட்டு விளையாடியதில் 38 பேரும் கைதாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.