Thiruvarur

News November 7, 2024

நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவிகள்

image

முத்துப்பேட்டை கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சமீபத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 5 தங்கப்பதக்கமும், 12 வெள்ளி பதக்கமும், 4 வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர். பதக்கங்களை பெற்ற மாணவிகளையும் உதவியாக இருந்த ஆசிரியைகளை தலைமையாசிரியை மாலினி, உதவி தலைமை ஆசிரியர் வனிதா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.

News November 6, 2024

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை (நவ.7) உதவி கலெக்டர் அலுவலகத்திலும், மன்னார்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் நவம்பர் 14-ஆம் தேதி மன்னார்குடி உதவி கலெக்டர் உட்கோட்ட அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 6, 2024

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை நேரடியாக எஸ்பி ஜெயக்குமாரிடம் வழங்கினார்கள். இதில் மொத்தமாக 25 மனுக்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு மனுதாரரிடமும் தனித்தனியே குறைகளை கேட்டு சம்மந்தப்பட்ட பகுதி அதிகாரிகளிடம் உடனடியாக உரிய விசாரணை செய்ய  எஸ்.பி உத்தரவிட்டார்.

News November 6, 2024

திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 6, 2024

திருவாரூர் ரேஷன் கடையில் வேலை: நாளை கடைசி நாள்

image

திருவாரூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். திருவாரூரில் 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். ஷேர் செய்யவும்

News November 6, 2024

முத்துப்பேட்டை அருகே கடலில் தவறிவிழுந்து மீனவர் பலி

image

முத்துப்பேட்டை செங்காங்காடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் மகேந்திரன்(50) இன்று காலை அலையாத்திகாட்டை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது திடீரென்று தவறில் கடலில் விழுந்து மூழ்கி பலியானார். இதனையடுத்து போலீசார் மீனவரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 6, 2024

திருவாரூரில் சிறப்புக் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, 100 நாள் அட்டை உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News November 5, 2024

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு காவல் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு தனிப்பிரிவு காவலர்கள் பொது மக்களுடன் பழகி ரகசிய தகவல்களை முன்கூட்டியே சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல்களை அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டது. விரல்ரேகைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு குற்ற வழக்குகளில் தடயங்களை சேகரித்து உடனுக்குடன் மாநில குற்ற ஆவணத்துடன் ஒப்பீடு செய்ய அறிவுறுத்தினார்.

News November 5, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் திருவாரூர், மன்னார்குடி கோட்ட அளவிலான கூட்டமானது நாளை மறுதினம் (7ஆம் தேதி) திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 5, 2024

திருவாரூரில் அதிமுக பிரமுகர் கைது

image

திருவாரூரில் தந்தை மீது போடப்பட்ட போக்சோ வழக்கை வாபஸ் வாங்க கூறி, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய அதிமுக வார்டு செயலாளர் நேற்று கைது செய்யப்பட்டார். மனைவி மீனாட்சிக்கும் பாலாஜிக்கும் அடிக்கடி தகவல் ஏற்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே உள்ள வழக்கை வாபஸ் வாங்க கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!