Thiruvarur

News November 8, 2024

திருவாரூரில் கொட்டி தீர்த்த மழை

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 10 தினங்களாக ஆங்காங்கே கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டூர் , விக்ரபாண்டியம், ராயநல்லூர், பல்லவராயன் கட்டளை, புழுதி குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.  இதனால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 7, 2024

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி

image

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாநில அளவிலான பெண்களுக்கான போட்டி 2025 ஜன. 28,29,30 தேதிகளில் ராமநாதபுரத்தில் நடக்கிறது. எனவே பெண்களுக்கான மாவட்ட அணியை தேர்வு செய்ய நவ.10ஆம் தேதி திரு.வி.க.கலைக் கல்லூரியில் தேர்வு நடக்கிறது. விருப்பமுள்ள பெண்கள் தேர்வுக்கு வரலாம். 31/08/2012 முன்பு பிறந்திருக்க வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 7, 2024

திருவாரூர்: 1 மாத கால அவகாசம் – அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்கள்,சிறுவர் காப்பகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாறுவாழ்வு மையங்கள் நடத்துபவர்கள் அந்த இல்லங்களை உரிய முறையில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனில் இந்த ஒரு மாதத்திற்குள் பதிவு செய்து கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News November 7, 2024

நியாய விலை கடை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடை பணியாளர்கள் சார்பில் இன்று திருவாரூரில் ரேஷன் கடைகளை அடைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளின் முன்வைத்து சாலை மறியல் போராட்டம் மற்றும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ரேஷன் கடை ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

News November 7, 2024

திருவாரூரில் கடன் வழங்கும் முகாம்

image

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு சிறுபான்மையின் பொருளாதார மேம்பாட்டு கழகம் டாம்கோ மூலம் நிதியாண்டிற்கான கடன் உதவி வழங்கும் முகாம் நடைபெறுகிறது நவம்பர் 6 முதல் டிசம்பர் 3 வரை நடக்கிறது முகாமில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் புத்த மதத்தினர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். தனிநபர் கடன் கல்வி கடன் சுய உதவிக் கடன் வழங்கப்படுகிறது. வயது 18 முதல் 60 வரை இருக்கலாம் என கலெக்டர் அறிவித்தார்.

News November 7, 2024

ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி

image

திருவாரூரில் தாட்கோவின் மூலம் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant- Intermediate), செயலாளர்-இடைநிலை (Company Secretary-Intermediate) செலவு மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost Management Accountant Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

News November 7, 2024

இன்று மாலை சூரசம்ஹாரம் திருவிழா

image

கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் உற்சவத்தை முன்னிட்டு மன்னார்குடி நடுவாணியத்தெரு அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் பின்னர் அன்னதானமும் நடைபெறுகிறது பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகின்றனர்

News November 7, 2024

திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதை மின்மயமாக்கும் பணி

image

திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதை மின்மயமாக்கும் பணி இரு பிரிவுகள் ஆக ரூபாய் 143 கோடி செலவில் நடந்து வருகிறது. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி இடையே வரும் மார்ச் 2025 முன்பு பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்படி டிசம்பர் 2025 முன்பு பணிகள் முடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

மழை வெள்ளத்தால் பாதிப்பா – முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று  மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கைப்பேசி எண் 9498100865-க்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News November 7, 2024

மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

image

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட தண்டலை, ஆட்சியர் அலுவலகம் ,வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி திரிவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றனர் இதனால் பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில் 80 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது

error: Content is protected !!