India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுக் கல்வித் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்கு கற்போர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தன்னார்வலர்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. நாளை (நவ.10) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 569 மையங்களில் பயிலும் 9,474 கற்போர்களுக்கு அந்தந்த மையங்களில் எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.
திருவாரூர் புலிவலம் அருகேயுள்ள கூத்தம்பாடி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் அழகு ராமானுஜன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வராது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் தெற்கு ரயில்வே தலைமையகத்தில் சந்தித்து ரயில் சேவைகள் வேண்டி கோரிக்கை வைத்தார். அதில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி பணியினை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதாக ரயில்வே மேலாளர் உறுதியளித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நவ.9 (இன்று) ஓரிரு இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் நவ.9-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 5% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நவம்பர் 14ஆம் தேதி தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகே ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். வாழ்நாள் சான்று பதிவு செய்தல் மற்றும் ஒரே ரேங்க் ஒரே பென்ஷன் ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பான சந்தேகங்களை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கேட்டுப் பெறலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கூறும்போது, குழந்தைகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கருத்தரிப்பு கண்டறியப்பட்டால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவது பொருட்டாக திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் நாளை (நவ.9) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம், பெயர் இணைப்பு உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர்- 8, 9, 10, 11, 12, 13 ஆகிய 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!
நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை, நவீன சேமிப்பு கிடங்கில் சேகரித்து அங்கிருந்து லாரிகள் மூலம் நீடாமங்கலம் கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியோகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நேற்று இரவு திருவண்ணாமலைக்கு 21 வேகன்களில் 1000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இருண்ட வானிலை காணப்படுவதால் தொடர்ந்து மழைக்கான வாய்ப்பு தென்படுகிறது. எனவே பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.