India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமக்கோட்டை அருகே பரசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் பெருகவாழ்ந்தான் பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வீடு தீப்பிடித்து எறிந்தது. தகவல் அறிந்த திருமக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.35,000 பணம், டிவி, பிரோ, கட்டில் எரிந்து சேதமானது.
உலகப் பிரசித்திபெற்ற முத்துப்பேட்டை தர்கா 723-வது வருட பெரிய கந்தூரி விழா சென்ற 3-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஓவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நாளான பத்தாம் இரவு நாளை 12-ந்தேதி நள்ளிரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்கின்றனர். ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் தலைமையில் இன்று (நவ.11) திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை ஆட்சியர் சாருஸ்ரீ பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூா் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. விண்ணப்பங்கள் 15.1.2025 க்குள்ளும் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட தொழில் சங்க பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் கிரி ஆகியோர் இன்று சென்னை தேமுதிக தலைமையகத்தில் உள்ள தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவர் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்ததால் அங்கு பாட்டிலில் இருந்த டீசலை தண்ணீரென நினைத்து குடித்து விட்டார். இதனால் வலியால் துடித்த அவர் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று (நவ.9) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கள்ளச்சந்தையில் மது விற்பனை, மணல் கடத்தல், பணம் வைத்து சூதாட்டம் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு வருவாயினை பெருக்கிட ஏதுவாகவும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன்பிடி உபகரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள திருவாரூரைச் சேர்ந்தவர்கள் நவ.20 க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களின் கல்வி நலனே முக்கியம். 5 ஆம் வகுப்பு முடித்து செல்லும் அனைத்து மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் எழுதுதல், வாசித்தல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார். இவற்றை பார்வை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும் என்றார்.
திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் அனைத்து பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மன்னார்குடி நகர காவல் நிலையம், நீடாமங்கலம் காவல் நிலையம், ஆலிவலம் காவல் நிலையம், மன்னார்குடி போக்குவரத்து பிரிவு போலீசார் பாராட்டப்பட்டு அந்தந்த டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.