India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், இன்று (நவ.16) மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 225.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூத்தாநல்லூரில் உள்ள 24 வார்டுகளில் சேகரமாகும் ‘மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடை’ செய்யப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளை மீறி எவரேனும் செயல்பட்டால், கட்டணமில்லா தொலைபேசி எண் 14420 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நவம்பர் 30ஆம் தேதி வருகை தருகிறார். அவர் மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முத்துப்பேட்டையில் அலையாத்தி காடுகளும், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமும் உள்ளது. இங்கு பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை சார்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் பறவைகளை வேட்டையாடிய விக்னேஷ் என்பவரை கைது செய்து 10 பறவைகளை பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (16.11.2024) காலை 6 மணி துவங்கி மாலை 4 மணி வரை மாவட்டம் முழுவதும் சராசரியாக 13.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை 121 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,194 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை நடத்தப்படுகிறது. இதே போல வருகின்ற நவ.23, 24 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறுவதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் அருகே விளமல் அரசினர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் திருவாரூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருவாரூர் கலெக்டர் அறிவித்துள்ளார். சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்த உதவிய ஆடிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க நவ.20 கடைசி நாள் ஆகும்.
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான போட்டிகள் நவ.19 அன்றும், 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான போட்டிகள் நவ.20 அன்றும் திருவாரூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரை வழங்குவதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருவாரூர் வருகை தருகிறார்.
Sorry, no posts matched your criteria.