Thiruvarur

News April 17, 2025

திருவாரூர் ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய<> <>tnpsc.gov.in<<>> <<>>என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

News April 17, 2025

விளையாட்டுப் பிரிவில் கொடைக்கால பயிற்சி முகாம்

image

திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவால், 2025 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள்,மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு திருவாரூர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் எதிர்வரும் 25 முதல் 15.05.2025 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

1052 பேருக்கு பல்வேறு வகையான தொழில் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் தகவல்

image

நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், திருவாரூில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 2024-2025ஆம் ஆண்டில் 1052 பேருக்கு பல்வேறு வகையான தொழில் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதில் 754 பேர் சுயத்தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் 377 பேருக்கு வங்கி கடன் உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 17, 2025

போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்த lUML மாவட்ட தலைவர்

image

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் V.S.N.முஹம்மது ஆதம் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நகர அலுவலகத்திற்கு வருகை புரிந்து அழைப்பு கொடுத்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

News April 17, 2025

BREAKING: திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய காவிரிப் படுகை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியில் செல்லும் போது குடையை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கும் இந்தத் தகவலை ஷேர் பண்ணுங்க..

News April 17, 2025

அரசுத் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC மற்றும் TNUSRBஇல் வெளியான குரூப் 1 மற்றும் SI தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதற்கு விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

News April 17, 2025

திருவாரூர் சிறப்பு பேருந்து இயக்கம்

image

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், மறுமார்க்கமாக திருவாரூருக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 17, 2025

திருவாரூர் பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் அறிவுறுத்தலின்படி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் பல் எடுப்பாக இருப்பதை சரி செய்வதற்காக கிளிப் வழங்கப்பட உள்ளது . இதனை முன்னிட்டு பள்ளியில் அவ்வாறு உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உடனே தெரியபடுத்துமாறு கல்வி துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

News April 16, 2025

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக காவல்துறை டி.ஐ.ஜி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்களை பெற்றுக் பெற்றுக்கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன்கரட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

News April 16, 2025

திருவாரூர்: தஞ்சை சரக டி.ஐ.ஜி ஆய்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் காவல் அலுவலகத்தில் இன்று தஞ்சை சரக காவல் துறை துணைத்தலைவர் ஜியாவுல்ஹக் இன்று மாவட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!