India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூரில் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி சார்பில், 2024-25 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கடன் உதவி’ திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், விளமல் என்ற முகவரியை அணுக ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவ.25 (திங்கள்) முதல் நவ.28 (வியாழன்) வரை திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வரின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இன்று டி.5 காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்ட வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மது போதையில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொலை செய்த திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் முரசொலி குமரன் என்பவர் கொண்ட தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
திருத்துறைப்பூண்டி வட்டம் மாங்குடி நுணாக்காடு காடு கடுவெளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஐந்து நாட்கள் தொடர்மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த குருவை நெற்பயிர்கள் சாய்ந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி நெற்கதிர்கள் வீணாகி உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்
வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் (நவ.20) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவலை பகிரவும்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் வரும் 23 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் உட்பட நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் தேவைப்படும் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் நபர்கள் 1077, 04366-226623 மற்றும் 9488547941 (வாட்ஸ்அப்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
Sorry, no posts matched your criteria.