India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவது பொருட்டாக திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் நாளை (நவ.9) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம், பெயர் இணைப்பு உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர்- 8, 9, 10, 11, 12, 13 ஆகிய 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!
நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை, நவீன சேமிப்பு கிடங்கில் சேகரித்து அங்கிருந்து லாரிகள் மூலம் நீடாமங்கலம் கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியோகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நேற்று இரவு திருவண்ணாமலைக்கு 21 வேகன்களில் 1000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இருண்ட வானிலை காணப்படுவதால் தொடர்ந்து மழைக்கான வாய்ப்பு தென்படுகிறது. எனவே பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 10 தினங்களாக ஆங்காங்கே கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டூர் , விக்ரபாண்டியம், ராயநல்லூர், பல்லவராயன் கட்டளை, புழுதி குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாநில அளவிலான பெண்களுக்கான போட்டி 2025 ஜன. 28,29,30 தேதிகளில் ராமநாதபுரத்தில் நடக்கிறது. எனவே பெண்களுக்கான மாவட்ட அணியை தேர்வு செய்ய நவ.10ஆம் தேதி திரு.வி.க.கலைக் கல்லூரியில் தேர்வு நடக்கிறது. விருப்பமுள்ள பெண்கள் தேர்வுக்கு வரலாம். 31/08/2012 முன்பு பிறந்திருக்க வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்கள்,சிறுவர் காப்பகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாறுவாழ்வு மையங்கள் நடத்துபவர்கள் அந்த இல்லங்களை உரிய முறையில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனில் இந்த ஒரு மாதத்திற்குள் பதிவு செய்து கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடை பணியாளர்கள் சார்பில் இன்று திருவாரூரில் ரேஷன் கடைகளை அடைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளின் முன்வைத்து சாலை மறியல் போராட்டம் மற்றும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ரேஷன் கடை ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு சிறுபான்மையின் பொருளாதார மேம்பாட்டு கழகம் டாம்கோ மூலம் நிதியாண்டிற்கான கடன் உதவி வழங்கும் முகாம் நடைபெறுகிறது நவம்பர் 6 முதல் டிசம்பர் 3 வரை நடக்கிறது முகாமில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் புத்த மதத்தினர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். தனிநபர் கடன் கல்வி கடன் சுய உதவிக் கடன் வழங்கப்படுகிறது. வயது 18 முதல் 60 வரை இருக்கலாம் என கலெக்டர் அறிவித்தார்.
திருவாரூரில் தாட்கோவின் மூலம் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant- Intermediate), செயலாளர்-இடைநிலை (Company Secretary-Intermediate) செலவு மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost Management Accountant Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.