Thiruvarur

News November 10, 2024

திருவாரூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று (நவ.9) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கள்ளச்சந்தையில் மது விற்பனை, மணல் கடத்தல், பணம் வைத்து சூதாட்டம் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News November 10, 2024

திருவாரூர் மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு வருவாயினை பெருக்கிட ஏதுவாகவும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன்பிடி உபகரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள திருவாரூரைச் சேர்ந்தவர்கள் நவ.20 க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 9, 2024

மாணவர்களின் கல்வி நலனே முக்கியம் – திருவாரூர் கலெக்டர்

image

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களின் கல்வி நலனே முக்கியம். 5 ஆம் வகுப்பு முடித்து செல்லும் அனைத்து மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் எழுதுதல், வாசித்தல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார். இவற்றை பார்வை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும் என்றார்.

News November 9, 2024

திருவாரூர்: சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கிய எஸ்.பி

image

திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் அனைத்து பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மன்னார்குடி நகர காவல் நிலையம், நீடாமங்கலம் காவல் நிலையம், ஆலிவலம் காவல் நிலையம், மன்னார்குடி போக்குவரத்து பிரிவு போலீசார் பாராட்டப்பட்டு அந்தந்த டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

News November 9, 2024

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 9,474 பேருக்கு தேர்வு

image

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுக் கல்வித் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்கு கற்போர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தன்னார்வலர்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. நாளை (நவ.10) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 569 மையங்களில் பயிலும் 9,474 கற்போர்களுக்கு அந்தந்த மையங்களில் எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.

News November 9, 2024

திருவாரூர் எழுத்தாளர் அழகு ராமானுஜம் மறைவு

image

திருவாரூர் புலிவலம் அருகேயுள்ள கூத்தம்பாடி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் அழகு ராமானுஜன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வராது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

News November 9, 2024

ரயில்வே பொதுமேலாளரை சந்தித்த நாகை MP

image

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் தெற்கு ரயில்வே தலைமையகத்தில் சந்தித்து ரயில் சேவைகள் வேண்டி கோரிக்கை வைத்தார். அதில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி பணியினை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதாக ரயில்வே மேலாளர் உறுதியளித்தார். 

News November 9, 2024

திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நவ.9 (இன்று) ஓரிரு இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் நவ.9-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 5% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 9, 2024

திருவாரூரில் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நவம்பர் 14ஆம் தேதி தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகே ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். வாழ்நாள் சான்று பதிவு செய்தல் மற்றும் ஒரே ரேங்க் ஒரே பென்ஷன் ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பான சந்தேகங்களை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கேட்டுப் பெறலாம்.

News November 9, 2024

திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கூறும்போது, குழந்தைகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கருத்தரிப்பு கண்டறியப்பட்டால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.