Thiruvarur

News January 10, 2025

அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு

image

பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பேருந்தை இயக்கிக் கொண்டு மண்ணுக்கு முண்டான் கிராமத்திற்கு சென்ற பொழுது, சசிகுமார், அருண், மனோஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஓட்டுநரை அடித்து காயப்படுத்தி அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

News January 9, 2025

திருவாரூரை அதிர வைத்த படுகொலை பாகம் – 3

image

திருவாரூர் மாவட்டத்தை அரசியல், ஆள் பலம் என தன் கையில் வைத்திருந்ததால், இதர கட்சிகளுக்கு கலைச்செல்வன் மீது அதிருப்தி இருந்துள்ளது. இச்சமயத்தில் தான் முட்டை ரவி கலைச்செல்வன் ஆதரவுடன் டெல்டா பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். இதுதான் மணல்மேடு சங்கருக்கும் கலைச்செல்வனுக்கும் பகை ஏற்பட காரணம் என்றும், காலப்போக்கில் இவர்கள் இருவருக்கும் நேரடி மோதல் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. தொடரும்

News January 9, 2025

மேல்நிலை வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான ஆண்டு பொது தேர்வு 2025 க்கான செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வுகள் 12 ஆம் வகுப்பிற்கு 07.02.2025 தொடங்கி 14.02.2025 முடிவடையும் எனவும், 11 ஆம் வகுப்பிற்கு 15.02.2025 தொடங்கி 21.02.2025 முடிவடையும் எனவும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

News January 9, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டால் பொதுமக்கள் ‘10581’ என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான போட்டோ அல்லது வீடியோக்களை 8072589305 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 9, 2025

தொழிலாளிக்கு 19 ஆண்டுகள் சிறை: திருவாரூர் கோர்ட் தீர்ப்பு

image

திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்டாலினை கஜேந்திரன் அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம் கஜேந்திரனுக்கு 19 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

News January 8, 2025

இவரின்றி எதுவும் நடக்காது: பாகம் – 2

image

திருவாரூர் திமுக பிரமுகர் கலைச்செல்வன் படுகொலையின் நேற்றைய தொடர்ச்சியை காண்போம். கலைஞர் பிறந்த மாவட்டமான திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் தான் பூண்டி கலைச்செல்வன். அப்போதைய காலக்கட்டத்தில் திருவாரூரில் திமுக மட்டுமின்றி இதர கட்சிகளும் கலைச்செல்வன் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என்ற நிலையில் இருந்தது. இதனாலேயே திமுகவின் தலைமைக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது. தொடரும்…

News January 8, 2025

வீணை வாசிப்பதில் முதலிடம் பெற்ற நன்னிலம் மாணவி

image

ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவி சாருமதி வீணை வாசிப்பதில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை இன்றைய இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் பாராட்டி கௌரவித்தார். SHAREIT

News January 8, 2025

தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை: நன்னிலம் கோர்ட் உத்தரவு

image

நன்னிலம் அருகே உள்ள பனங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு கொல்லுமாங்குடியில் பூக்கடை வைத்துள்ள முத்து என்பவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக நன்னிலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சுரேசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,500 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

News January 8, 2025

திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 133 பேர் கைது

image

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன.7) திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 16 பெண்கள் உட்பட 133 பேரை போலீசார் கைது செய்து காட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

News January 7, 2025

திருவாரூரை அதிர வைத்த கொலை

image

டெல்டா மாவட்டங்களை கடந்த 2007 ஆம் ஆண்டு அதிர வைத்தது தான் பூண்டி கலைச்செல்வன் படுகொலை. யார் இந்த கலைச்செல்வன் ? எதற்காக கொலை ? நடந்தது என்ன. தற்போதைய திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அண்ணன் தான் கலைச்செல்வன். திருவாரூர் திமுகவின் அசைக்க முடியாத நபர் என்றால் அது கலைச்செல்வன் எனக்கூறலாம். இவர் பகை காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தொடரும்…

error: Content is protected !!