Thiruvarur

News January 18, 2025

மகன் இறந்து விட்டதாக தவறான பதிவு: தந்தை மீது தாக்குதல்

image

அகரதிருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் ஆதித்யா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை, அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் குமாரின் நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக மணிவண்ணன் கேட்டதற்கு, பிரேம்குமார் அவரை தகாத வார்த்தையால் திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 18, 2025

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

image

முத்துப்பேட்டை, மண்ணுக்குமுண்டான் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, தெற்குநாகல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆறு மாத காலமாக காதலித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி தனியார் விடுதியில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அப்பெண்ணை திருமணம் செய்ய வாலிபர் மறுப்பதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 18, 2025

திருவாரூர் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, மாவட்டத்தில் நகரப் மற்றும் ஊரகப் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. எனவே கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் விடப்படும், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News January 18, 2025

திருவாரூர்: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in வேலைவாய்ப்பு இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து 28.02.2025-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

News January 17, 2025

பைக்கை திருடியவர் கைது

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் சரகத்துக்குட்பட்ட கீழ பாலம் அண்ணாமலை நகர் பகுதியில் சேர்ந்த வருனேஷ் என்பவரின் யமஹா R15 இரு சக்கர வாகனத்தை திருடிய பட்டுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தை மீட்டனர். கைது செய்யப்பட்ட கண்ணன் மீது ஏற்கனவே நாகப்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டையில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது

News January 17, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ் எஸ் நகரில் வருகிற ஜனவரி 24 முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் மூன்றாவது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன. எனவே அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

News January 17, 2025

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம்: கலெக்டர் 

image

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் 1 பாதுகாப்பு அலுவலர் மற்றும் 2 சமூக பணியாளர் பணியிடத்திற்கு 42 வயதிற்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை திருவாரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

நன்னிலம்: ரயில் முன் பாய்ந்து முன்னாள் காவலர் தற்கொலை

image

நன்னிலம் அருகே பாக்கம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (76). முன்னாள் தலைமை காவலராக பணியாற்றிய இவர் நேற்று (ஜன.16) பேரளம் ரயில் தண்டவாளம் அருகே தனது டூவீலரை நிறுத்தி, அதில் தனது புகைப்படம், முகவரி ஆகியவற்றை வைத்துவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அவரது உடலை கைப்பற்றிய திருவருர் ரயில்வே போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2025

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் கவனத்திற்கு 

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மட்டையாளர் (BATSMAN) மற்றும் விக்கெட் கீப்பர்களுக்கான (WICKET-KEEPER) தேர்வு வரும் சனிக்கிழமை (ஜன.18) திருவாரூர் திருவிக அரசுக் கலை கல்லூரியில் காலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13-21 வயதுக்குட்பட்ட பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்கீப்பர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் கட்டாயம் வொயிட்ஸ் (Whites) அணிந்திருக்க வேண்டும். 

News January 16, 2025

திருவாரூர்: ஒரே நாளில் ரூ.6.81 கோடிக்கு மது விற்பனை

image

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் (மதுபான) கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் தைபொங்கல் தினத்தன்று மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக கடந்த ஜன.14-ஆம் தேதி மட்டும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 100 டாஸ்மாக் கடைகளில் ரூ.6.81 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.81 லட்சம் அதிகமாகும்.

error: Content is protected !!