Thiruvarur

News April 23, 2025

திருவாரூர் அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு

image

ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் அங்கன்வாடி பணியாளர் 60, உதவியாளர் 14 இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை இங்கே <>க்ளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்து, நாளை (ஏப்.24) மாலை 5மணிக்குள் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..

News April 22, 2025

திருவாரூர்: தமிழில் பெயர்ப் பலகை வைக்க காலக்கெடு நிர்ணயம்

image

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் வரும் மே.15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைத்திட வேண்டும் என திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். தவறும் பட்சத்தில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE !

News April 22, 2025

திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஏப்.25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 8th முதல் டிகிரி, ITI, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் பங்கேற்கலாம். இந்த <>லிங்க்கில்<<>> பதிவு செய்து, படிவத்தை பதிவிறக்கம் செய்து முகாமிற்கு கொண்டு வர வேண்டும். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 22, 2025

முத்துப்பேட்டை அருகே தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சாம்பல்

image

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது குடிசை வீடு நேற்றிரவு திடீரென்று தீ பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்து அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் கருகி நாசமானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 21, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (21.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது 7 ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்.  அனைவருக்கும் Share செய்து பயனடைய செய்யுங்கள்.

News April 21, 2025

போதைப்பொருட்களுக்கு எதிரான செயலி அரசு அறிமுகம்

image

புகையிலை கலந்த பொருட்கள், மெல்லும் வாய் புகையிலை ஆகிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இவைகளின் விற்பனை காணப்பட்டால் அரசால் வடிவமைக்கப்பட்ட ‘DRUG FREE TN’ இச்செயலியின் மூலம் அல்லது 94440-42322 என்ற எண்ணிலோ போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. Share It

News April 21, 2025

திருவாரூர்: 10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்

News April 21, 2025

திருவாரூர் மாவட்ட வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

image

▶திருவாரூர் வட்டாட்சியர்- 04366-222379, ▶நன்னிலம் வட்டாட்சியர் – 04366-230456, ▶குடவாசல் வட்டாட்சியர் – 04366-262056, ▶வலங்கைமான் வட்டாட்சியர்-04374-264456, ▶மன்னார்குடி வட்டாட்சியர்- 04367-222291, ▶நீடாமங்கலம் வட்டாட்சியர்- 04367-260456, ▶திருத்துறைபூண்டி வட்டாட்சியர்- 04369-222456, ▶கூத்தாநல்லூர் வட்டாட்சியர்- 04369-222456. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

News April 21, 2025

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை : இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கு<> க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாளாகும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 21, 2025

திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

image

திருத்துறைப்பூண்டி அருகே மடத்துப்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!