Thiruvarur

News November 12, 2024

திருவாரூர் கலெக்டரின் குழந்தைகள் தின வாழ்த்து

image

நாளை (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இரண்டு பக்க வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகள் தின வாழ்த்துக்களோடு, பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவு இருந்தால் உடனே நெருங்கியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், போதை பழக்கம், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

திருவாரூரில் நவ.14 சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு 

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வரும் வியாழக்கிழமை காலை 9:30 மணி முதல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின்னர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மாலை 3 மணி அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. 

News November 12, 2024

திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு, கடலோர தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.12) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!

News November 12, 2024

திருவாரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

image

முத்துப்பேட்டை ஜாம்பவனோடையில் ஷேக் தாவூத் ஆண்டவர் தர்காவில் 723 வது சந்தனக்கூடு விழா நாளை அதிகாலை நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்ப இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கந்தூரி விழாவையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2024

மன்னார்குடி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்

image

திருமக்கோட்டை அருகே பரசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் பெருகவாழ்ந்தான் பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வீடு தீப்பிடித்து எறிந்தது. தகவல் அறிந்த திருமக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.35,000 பணம், டிவி, பிரோ, கட்டில் எரிந்து சேதமானது.

News November 11, 2024

நாளை முத்துப்பேட்டையில் சந்தன கூடு விழா

image

உலகப் பிரசித்திபெற்ற முத்துப்பேட்டை தர்கா 723-வது வருட பெரிய கந்தூரி விழா சென்ற 3-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஓவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நாளான பத்தாம் இரவு நாளை 12-ந்தேதி நள்ளிரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்கின்றனர். ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

News November 11, 2024

திருவாரூர் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் தலைமையில் இன்று (நவ.11) திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை ஆட்சியர் சாருஸ்ரீ பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

News November 11, 2024

திருவாரூா் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவாரூா் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. விண்ணப்பங்கள் 15.1.2025 க்குள்ளும் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

News November 10, 2024

விஜயகாந்த் நினைவிடத்தில் திருவாரூர் தேமுதிக நிர்வாகிகள்

image

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட தொழில் சங்க பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் கிரி ஆகியோர் இன்று சென்னை தேமுதிக தலைமையகத்தில் உள்ள தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News November 10, 2024

நீடாமங்கலம் அருகே டீசல் குடித்து ஒருவர் பலி

image

நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவர் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்ததால் அங்கு பாட்டிலில் இருந்த டீசலை தண்ணீரென நினைத்து குடித்து விட்டார். இதனால் வலியால் துடித்த அவர் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.