India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.27) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவலர்கள் எண்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் <
திருவாரூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். SHARE IT NOW…
காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
பொதுவாக விநாயகர் என்றதும் யானை முகமும், பெரிய காதும் தான் ஞாபகம் வரும். ஆனால், திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இங்குள்ள விநாயகரை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க..
திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர்கல்வியில் சேராத 35 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் +2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான உயர்வுக்கு படி என்கிற வழிகாட்டல் முகாம் திருவாரூர் வேலுடையார்பள்ளியில் வரும் செப்.,1-ம் தேதி முதல் மற்றும் செப்.,11 வரை நடைபெற உள்ளது என்றார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள்<
த்மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி.பாத்திமா அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Sorry, no posts matched your criteria.