India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மீனவர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து இதுவரை மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுள்ளவர்கள் ஏப்.01ஆம் தேதி முதல் தங்களது புகைப்படம், பழைய உறுப்பினர் அட்டை, ஆதார், வங்கிகணக்கு ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மீன்நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
திருவாரூர் ஶ்ரீ தியாகராஜர் சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா தொடங்க இருப்பதை முன்னிட்டு, திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா துஜா ரோஹணம் எனும் பெரிய கொடியேற்றம் மார்ச்.15ஆம் தேதி காலை 10.30 மேல் 11.30 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தியாகராஜர் சுவாமி பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.. ஆரூரா தியாகேசா..
திருவாரூர் மாவட்டம், களப்பால் அருகே தெற்கு நாணலூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டராக கணேசன் எனும் முதியவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.6) மாலை மோட்டார் அறையில் ஸ்விட்ச்சை இயக்கியபோது எதிர்ப்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து களப்பால் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆறு நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரொக்கமாக 15 லட்சத்து 45 ஆயிரத்து 540 ரூபாயும், பொன் இனங்கள் 165 கிராம்,வெள்ளி இனங்கள் 360 கிராம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அறநிலைய உதவி ஆணையர் சொரிமுத்து, செயல்அலுவலர் கிருஷ்ணகுமார்,தக்கார் மும்மூர்த்தி முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
திருவாரூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சீனிவாசன் (51) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவரை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரண்யா என்பவர் விசாரணை மேற்கொண்டு புகாரின்பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓடாச்சேரி 18Ap018PN என்ற ரேஷன் கடை குறியீடு கொண்ட பகுதியில் மார்ச் 8 சனிக்கிழமை ரேஷன் கடை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் போன்றவை நடைபெற இருக்கின்றன. இதில் வருவாய் கோட்ட அலுவலர் திருவாரூர் தலைமையில் நடைபெற இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் அருகே அதங்குடி கிராமத்தில் மணல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு கூத்தாநல்லூர் போலீசார் விரைந்தனர். அப்போது காவலர்களை கண்ட மணல் கொள்ளையர்கள் அங்கிருந்த தப்பி ஓடினர். பின்னர் அப்பகுதியை சோதனையிட்ட போலீசார் மணல் திருட பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.