Thiruvarur

News March 6, 2025

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை

image

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆறு நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரொக்கமாக 15 லட்சத்து 45 ஆயிரத்து 540 ரூபாயும், பொன் இனங்கள் 165 கிராம்,வெள்ளி இனங்கள் 360 கிராம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அறநிலைய உதவி ஆணையர் சொரிமுத்து, செயல்அலுவலர் கிருஷ்ணகுமார்,தக்கார் மும்மூர்த்தி முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

News March 6, 2025

திருவாரூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

image

திருவாரூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சீனிவாசன் (51) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவரை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரண்யா என்பவர் விசாரணை மேற்கொண்டு புகாரின்பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

News March 6, 2025

திருவாரூர்: பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

image

திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓடாச்சேரி 18Ap018PN என்ற ரேஷன் கடை குறியீடு கொண்ட பகுதியில் மார்ச் 8 சனிக்கிழமை ரேஷன் கடை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் போன்றவை நடைபெற இருக்கின்றன. இதில் வருவாய் கோட்ட அலுவலர் திருவாரூர் தலைமையில் நடைபெற இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2025

கூத்தாநல்லூர்: மணல் திருட பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்

image

கூத்தாநல்லூர் அருகே அதங்குடி கிராமத்தில் மணல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு கூத்தாநல்லூர் போலீசார் விரைந்தனர். அப்போது காவலர்களை கண்ட மணல் கொள்ளையர்கள் அங்கிருந்த தப்பி ஓடினர். பின்னர் அப்பகுதியை சோதனையிட்ட போலீசார் மணல் திருட பயன்படுத்தப்பட்ட  டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

News March 5, 2025

திருவாரூர் வரும் துணை முதல்வர்: திமுகவினருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை தர உள்ளார். இதனையடுத்து திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில் வெண்ணியில் இரவு 7.30 மணி அளவில் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 5, 2025

திருவாரூர் தியாகராஜர் கோயில் அறிந்ததும், அறியாததும்

image

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.

News March 5, 2025

திருவாரூர் மருத்துவ தொழில் தேர்வுக்கான ஆங்கில பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிஎஸ்சி, எம்.எஸ்.சி நர்சிங் முடித்த ஆதிதிராவிட இன மக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மோகசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE பண்ணுங்க.

News March 4, 2025

நாம் தமிழர் நூதன போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் தீர்வு ஏதும் கிடைக்காததால், வரும் 5/03/2025 புதன்கிழமை குப்பையில் குடியேறும் நூதனப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பேரூராட்சி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காணப்படும் என நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி விளையாட்டு மன்றங்கள் அமைக்கபட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் என அனைவரும் மன்றத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News March 3, 2025

திருவாரூர் கலைஞர் கோட்டத்தை பார்வையிட்ட முதல்வர்

image

திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வரும் வழியில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஏராளமானோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!