Thiruvarur

News March 22, 2024

முரசொலிக்கு மன்னார்குடியில் உற்சாக வரவேற்பு

image

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலி இன்று காலை மன்னார்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை நகர் செயலாளர் வீரா கணேசன், நகரமன்ற தலைவர் சோழராஜன் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் வரவேற்பளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

News March 22, 2024

நாளை திருவாரூர் வரும் முதல்வர்

image

மக்களவை தேர்தலுக்கான பரப்புரை தொடங்கியுள்ளதால், திருச்சியில் இன்று முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். இதனையடுத்து திருவாரூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 23ஆம் தேதி வருகை தர உள்ளார். இந்நிலையில் இதுகுறித்த முன்னேற்பாடுகள் குறித்து எம்எல்ஏ பூண்டி கலைவாணன், அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

News March 22, 2024

பேரளம் சிவன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

image

பேரளம் தருமையாதீனத்திறகுச் சொந்தமான ஸ்ரீ பவானியம்மன் சமேத ஸ்ரீ சுயம்புநாதஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சிவன் மற்றும் அம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் தருமையாதீனம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலையும் தொடங்கி வைத்தார். 

News March 21, 2024

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

image

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராகவும், 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.

News March 21, 2024

திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளுர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர். சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 21, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மார்ச்.21ஆம் தேதி இம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

News March 20, 2024

திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்

image

தியாகராஜ சாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப். 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் நாளை (மாா்ச்.21) காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது. 

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க <>கிளிக் <<>>செய்யவும்.

News March 19, 2024

திருவாரூர்: EVM இயந்திரம் உள்ள அறைகளில் கலெக்டர் ஆய்வு

image

மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News March 19, 2024

திருவாரூரில் 21ல் மதுக்கடைகள் மூடல்

image

உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் விடுமுறை தினமாக அறிவித்து அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்

error: Content is protected !!