India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று திருவாரூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னாள் தலைவர் ராகவன் மற்றும் மாநில மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், தேர்தல் பிரசாரம் குறித்து திட்டமிடப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் இன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சங்கீதா ஆணையர் சித்ராசோனியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் புவனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் இன்று மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சியில் வீடியோ மூலம் வாக்குபதிவு அலுவலர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பயிற்சியை பார்வையிட்டார். கோட்டாட்சியர் கீர்த்தனா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. பல்வேறு பிரிவு அலுவலர்களின் பணி விவரங்கள் வீடியோ மூலம் விளக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பயிற்சி முகாமை பார்வையிட்டார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவாரூர், கொரடாச்சேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற வேட்பாளர்கள் தஞ்சாவூர் முரசொலி (திமுக) நாகப்பட்டினம் செல்வராஜ் (இ.கம்யூ.) ஆகியோரை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்ட மேடையின் அருகில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சிறப்பு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நாகை மக்களவை வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஶ்ரீ முள்ளாச்சி மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா நேற்று நடைபெற்றது. தி.து.பூண்டி மலர் வணிக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை (24.03.24) இரவு 10 மணிக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை (25.03.16) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமியின் இடது பாதமும், அம்பிகையின் வலது பாதமும் தரிசனம் செய்யலாம். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பாத தரிசனம் காண அனைவரும் வருகைதர கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.