Thiruvarur

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேத நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது,

News March 29, 2024

சங்கட ஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு

image

மன்னார்குடி ஒற்றைத் தெருவிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயிலில் நேற்று சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்ய பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

News March 28, 2024

திருவாரூர்: மீம்ஸ் போட்டி அறிவிப்பு

image

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மீம்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன. voter education and electoral participation என்ற தலைப்பின் கீழ் தயாரிக்க வேண்டும், மேலதிக விபரங்களுக்கு 9578290250 என்ற வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். கடைசி தேதி 2/4/24 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

பதற்றமான வாக்குச்சாவடி குறித்து ஆட்சியர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடி மையங்களான பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

News March 28, 2024

பாஜகவில் இணைந்த மருத்துவர்

image

திருவாரூரில் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன் (28.3.24) இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக இணைந்த மருத்துவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News March 28, 2024

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை.

image

தில்லைவிளாகம் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று. இதில் சுமாா் 102 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நாளை (மாா்ச்.29) நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது.

News March 28, 2024

திருவாரூர் மாவட்ட எஸ்பி ஆய்வு

image

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட சேமங்கலம், அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம், IP – கோவில், விஜபுரம், காரைக்காடு தெரு மற்றும் மடப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை இன்று (27.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

News March 27, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்து அந்தந்த வாக்குச்சாவடி மையத்தினை இன்று திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரு ஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருவாரூர் நகராட்சி துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

மன்னார்குடி: ரூ.60,487 கல்வி உதவித்தொகை வழங்கல்

image

மன்னார்குடி பின்லே பள்ளியில் பயின்ற குமட்டித்திடல் சந்தானம் மத்திய இணை ரயில்வேத்துறை அமைச்சராக செயல்பட்டவர். அன்னாரின் நினைவாக அவரது குடும்பத்தார் பின்லே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு கல்வி உதவித் தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகின்றனர்.
அவ்வாறே இந்த ஆண்டு ஆதித்யா என்னும் மாணவனுக்கு 60,487 ரூபாய் அவர்கள் குடும்பத்தார் சார்பாக இன்று வழங்கப்பட்டது.

News March 27, 2024

குடவாசல்: தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு

image

குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 92 நடுநிலை/தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டு 26 பேர் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 12000 ரூபாய் மதிப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மதிப்பூதியம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

error: Content is protected !!