Thiruvarur

News April 1, 2024

எடப்பாடி பழனிச்சாமி திருவாரூரில் பிரச்சாரம்

image

திருவாரூர் தெற்கு வீதியில் நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பொதுக்கூட்டத்தில் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ எஸ் மணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

News March 31, 2024

மன்னார்குடி பகுதியில் கலெக்டர் ஆய்வு

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடி மையங்களை திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News March 31, 2024

திருவாரூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

திருவாரூர், கொல்லுமாங்குடி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாகை வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்நிலையில் அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணியினை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News March 31, 2024

கோவர்தன கிரி வாகனத்தில் கோபாலன்

image

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.

News March 30, 2024

கோவர்தன கிரி வாகனத்தில் கோபாலன்

image

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.

News March 30, 2024

திருவாரூர்: தேர்தல் செலவின புகார் தெரிவிக்க அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த இடங்களில் தேர்தல் தொடர்பான செலவின புகார்களை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர் வருண்சோனியின் கைபேசி எண்ணில் 9363981394 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News March 30, 2024

பதற்றமான வாக்கு சாவடி குறித்து ஆய்வு 

image

மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட அடியக்கமங்கலம், திருவாரூர் நகரில் உள்ள காரைக்காட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை (29.03.2024) மாலை தேர்தல் பார்வையாளர் சரணப்பா நேரில் பார்வையிட்டார். அப்போது, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.

News March 30, 2024

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

image

மன்னார்குடி ஜேசி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நேற்று (29/3/24) மாலை நடைபெற்றது. இதில் ஜே சி தலைவர் வினோத் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மகேஷ் முன்னிலை வகித்தார் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் (ம) செல்பி ஸ்டான்டு (ம) வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். ஜே.சி செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

News March 29, 2024

அதிமுக, பாஜக சுவர் விளம்பரம்..அதிருப்தி!

image

முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் மறைக்காகோரையாறு பாலம், உப்பூர் பஸ் ஸ்டாண்ட் கட்டிடம், ஆலங்காடு படித்துறை பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்களில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் பெயரளவில் வெள்ளை சுண்ணாம்பு கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விளம்பரம் அப்படியே தெரிகிறது. இதனால் மாற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு அதிருப்தியடைந்துள்ளனர்.

News March 29, 2024

திருவாரூர்: வர்த்தகர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

பேரளம் நகரத்தில் மழைநீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பேரளம் கடைத்தெரு சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் நாள் முழுவதும் மண், தூசிகள் பறந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே இதனை விரைந்து முடிக்க கடையடைப்பு போராட்டம் வரும் 04-04-2024  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!