India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீடாமங்கலம், ஒளிமதி ஆகிய பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று (02.04.2024) இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நேரில் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் நீலன் அசோகன் தந்தையும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவரும் கல்வியாளருமான உ.நீலன் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இறுதி ஊர்வலம் நாளை 3ந்தேதி மாலை 5மணியளவில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மறைந்த உ.நீலன் உடலுக்கு காங்கிரசார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மக்கள் செலுத்தினர்
திருவாரூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி எல்லோரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்.துண்டு பிரசுரங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவர்குடி மற்றும் வங்கநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. பலமுறை அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்கள் அறிவித்தும், அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கியும் ,எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
திருவாரூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நன்னிலம் அருகே உள்ள கீரனூர் சோதனை சாவடியில், மன்னார்குடி மேல நாகை பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.12,85,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர், குடவாசல் காவல் நிலைய திருட்டு வழக்கில் தொடர்புடைய சிவராமன் காலனியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் குருவி குருசக்தி (39) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குணம் உடையவர் என்பதால் மாவட்ட எஸ்.பி-யின் பரிந்துரையின் பேரில் குருசக்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கடைவீதியில் உள்ள கடை ஒன்றில் எச்பி மோட்டார் திருடப்பட்டதாக கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு லட்சுமாங்குடி மேல தெருவை சேர்ந்த கண்ணையன் என்பவரது மகன் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு அலுவலர்களுக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் கிகேட்டோ சேம மற்றும் திருவாருர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தனர்.
திருவாரூரில் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான வழை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தேர்தல் அலுவலர் சாரு ஸ்ரீ பவித்திரமாணிக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உட்பட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.