India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் 50ஆண்டுகள் ஆன்மிக பணியாற்றி மறைந்த செங்கமலம் யானைக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு நிறுவப்பட உள்ள கருங்கல் யானை சிலை நேற்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை கோயில்களில் ஆன்மிக பணியாற்றி மறைந்த யானைகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று முதல் 22.03.2025 வரை நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் தங்களது விவரங்களை மென்பொருளில் பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். பழைய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மீனவர்நலத்துறை அலுவலகம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நேரடியாக சென்று வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். SHARE NOW!
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் பதஞ்சலி மனோகரர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை நாளிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கம் உள்ளது. இக்கோயிலில் சிவன் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன் திருவடி காட்டி அருளிய தலம் என்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. இக்கோவில் பற்றி தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க…
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
திருவாரூர் தியாகராஜர் கோயில், எண்கண் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், திருவீழிமிழலை விழிநாதர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயில், திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில் ஆகிய கோவில்களை மிஸ் பண்ணிடாம பாருங்க! பகிரவும்..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புதிய அரசுக் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மக்களே SHARE பண்ணுங்க..
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு ஜுன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் பெற்றோர் (அ) பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராக 13 வயது அடையாதவராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். SHARE NOW..
சைவத்திருத்தலங்களின் தலைமை பீடமாகவும் பிறந்தாலே முக்தி தரும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திகழ்கின்ற திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி உலக பிரசித்தி பெற்ற ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக இன்று (13.03.2025) விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.