India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளிக்கலாம். எனவே இந்த வாய்ப்பை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுதினம் முதல் (அக்.10) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனுபவம் மிக்க பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து பயிற்சி பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (07.10.24 ) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
கொருக்கை கால்நடை பண்ணையை சிப்காட் ஆக மாற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்தும், கைவிட வலியுறுத்தியும் அக்டோபர் 8-இல் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டு வரும் 22 .10.2024 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாருர் அடுத்த இலவங்கார்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து அணிந்திருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கீழத்தெரு சந்தோஷ்(20) என்பவர் மீது எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருவாய்த் துறையின் சார்பில் சவுதி அரேபியா நாட்டில் கடந்த 6-9-2023 அன்று உயிரிழந்த மன்னார்குடியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.40,000-க்கான காசோலையை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ இன்று வழங்கினார் .
திருவாரூர் துணை மின் நிலையத்தில் நாளை (அக்.8) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருவாரூர் கடைவீதி, தெற்கு வீதி, கீழவீதி, சேந்தமங்கலம், அடிக்கமங்கலம், நெய்விளக்கு தோப்பு, திருக்கண்ணமங்கை, பெரும்பண்ணையூர், பவித்திரமாணிக்கம், ஓடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், இன்று நேரில் சென்று பார்வையிட்டு கவாத்து பயிற்சி குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, தஞ்சை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.5) இரவு 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்புலியுரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற முதியவர் டீ குடிப்பதற்காக மன்னார்குடி-திருவாரூர் சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ராஜமாணிக்கத்தின் மகன் மதியழகன் அளித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.