India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்ட மேடையின் அருகில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சிறப்பு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நாகை மக்களவை வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஶ்ரீ முள்ளாச்சி மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா நேற்று நடைபெற்றது. தி.து.பூண்டி மலர் வணிக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை (24.03.24) இரவு 10 மணிக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை (25.03.16) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமியின் இடது பாதமும், அம்பிகையின் வலது பாதமும் தரிசனம் செய்யலாம். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பாத தரிசனம் காண அனைவரும் வருகைதர கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலி இன்று காலை மன்னார்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை நகர் செயலாளர் வீரா கணேசன், நகரமன்ற தலைவர் சோழராஜன் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் வரவேற்பளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மக்களவை தேர்தலுக்கான பரப்புரை தொடங்கியுள்ளதால், திருச்சியில் இன்று முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். இதனையடுத்து திருவாரூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 23ஆம் தேதி வருகை தர உள்ளார். இந்நிலையில் இதுகுறித்த முன்னேற்பாடுகள் குறித்து எம்எல்ஏ பூண்டி கலைவாணன், அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பேரளம் தருமையாதீனத்திறகுச் சொந்தமான ஸ்ரீ பவானியம்மன் சமேத ஸ்ரீ சுயம்புநாதஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சிவன் மற்றும் அம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் தருமையாதீனம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலையும் தொடங்கி வைத்தார்.
திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராகவும், 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.
தமிழகத்தில் அடுத்த 3மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளுர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர். சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மார்ச்.21ஆம் தேதி இம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.