Thiruvarur

News March 19, 2024

திருவாரூர்: EVM இயந்திரம் உள்ள அறைகளில் கலெக்டர் ஆய்வு

image

மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News March 19, 2024

திருவாரூரில் 21ல் மதுக்கடைகள் மூடல்

image

உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் விடுமுறை தினமாக அறிவித்து அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்

News March 19, 2024

திருவாரூர் முதல்வர் பிரச்சாரம் இடம் தேர்வு

image

திருவாரூர் ‘வருகிற 23.03.24 தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பரப்புரை நடைபெறும் இடத்தினை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி .கே. கலைவாணன் எம்எம்ஏ, . தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ, நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

News March 18, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரூஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் பிரியங்கா மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 18, 2024

திருவாரூர்:  பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

உலகப் புகழ்பெற்ற ஆழி தேரோட்டம் மார்ச். 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஊது குழல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் ஊது குழல்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

News March 18, 2024

திருவாரூர் மக்களின் கவனத்திற்கு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2024

திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர், நாகை நாடாளுமன்ற தொகுதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில். 11 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா மக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் நடைமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 ஆயிரத்திற்கு மேல் தனிநபர் பணங்கள் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் நடைமுறையில் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

இறைச்சி கடைகளில் ஆய்வு

image

திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சியில் செயல்படும் மீன் மற்றும் இறைச்சி கடைகளை கூத்தாநல்லூர் நகர்மன்ற துணை தலைவர் எம்.சுதர்சன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூத்தாநல்லூர் பகுதியில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் ரமலான் மாத நோன்பை கடைப்பிடிப்பதால், அவர்களுக்கு சுகாதார முறையில் அன்றாடம் வரும் மீன் இறைச்சிகளை நல்ல முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News March 17, 2024

மது கடைகளுக்கு விடுமுறை

image

திருவாரூரில் உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோவில் தேர் திருவிழா மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் ஒருநாள் விடுமுறை என கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

News March 17, 2024

திருவாரூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சாருஸ்ரீ பார்வையிட்டு அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

error: Content is protected !!