Thiruvarur

News April 5, 2024

மன்னார்குடியில் இலவச தட்டச்சு பயிற்சி முகாம்.

image

மன்னார்குடி மேல முதல் தெருவில் இயங்கி வரும் சாமி தட்டச்சு பயிற்சி நிலையத்தில் பயிற்சி நிறுவனர் சக்கரவர்த்தியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல்.14ஆம் தேதி முதல் ஏப்ரல்.31ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு இலவச தட்டெழுத்து பயிற்சி முகாம் நடைபெறும். இதில், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என பயிற்சி நிறுவனர் தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

திருவாரூர் தபால் வாக்கு ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட விவேகானந்தர் தெரு தெற்கு சேத்தியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செலுத்துவதைத் திருவாரூர் மாவட்ட அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சாரு ஸ்ரீ இன்று நேரில் பார்வையிட்டார். இதில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் வட்டாட்சியர் செந்தில் உடனிருந்தனர்.

News April 5, 2024

மன்னார்குடி மின் தட்டுப்பாடு கோடை விவசாயம் பாதிப்பு

image

காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடி மின்சார தட்டுப்பாட்டால் கருதி வருகின்றது. குறிப்பாக 120 கிலோவாட் மின்சாரம் கிடைக்க வேண்டிய நிலையில் 90 கிலோவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனை உடனே சீர் செய்து கருகும் பயிா்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என நேற்று மன்னார்குடியில் விவசாய சங்க பிஆர். பாண்டியன் கூறினார்.

News April 5, 2024

திருவாரூர்: பெற்றோர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

image

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 சட்டப்பிரிவு 12(1)(சி)ன் படி 2024-2025 கல்வி ஆண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் சேர்வதற்கு ஏப்.,22 முதல் மே 20 வரை (rte.tnschools.gov.in)ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

வலங்கைமான் பகுதியில் அதிரடிப்படை அணிவகுப்பு

image

திருவாரூர்: மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் உத்தரவின்படி திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்கு சாவடி என கண்டறியப்பட்ட வலங்கைமான் பகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் திருவாரூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பி. மணிகண்டன், நன்னிலம் உட்கோட்ட கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய அதிரடி படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

News April 4, 2024

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் வேகம் அதிகரிப்பு

image

திருவாரூர், காரைக்குடி, பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்கி வந்த ரயிலின் வேகம் இனிவரும் காலங்களில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே மூலம் தகவல் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரயில் பயனாளிகள் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமென ரயில்வே துறையின் மூலம் ரயில் உபயோகிப்பாளர்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

திருவாரூரில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

image

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாகை மக்களவை வேட்பாளராக போட்டியிடும் இந்திய கூட்டணி கட்சியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து திருவாரூரில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

News April 4, 2024

மே 22, 23, 24 ஆம் தேதிகளில் தெப்பத் திருவிழா

image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகிறது. ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். அந்த வகையில், திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் நிகழாண்டு மே 22, 23, 24 ஆம் தேதிகளில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. தெப்பத்தில் நடைபெறும் இன்னிசைக் கச்சேரி குறித்தும் கோயில் நிா்வாகம் சாா்பில் பின்னா் அறிவிக்கப்பட உள்ளன.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!