India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவரை முன்விரோதம் காரணமாக விளாங்காடு கிராமத்தை சேர்ந்த அபிஷ், பிரதிப், ஆதி, இடும்பாவனம் பாலசுந்தரம், ஆகிய 4 பேர் சேர்ந்து தாக்கி ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடத்தில் ஐந்து புதிய ரயில் சேவை வரும் 03.05.24 முதல் துவங்கவுள்ளது. அதன்படி திருவாரூர்-திருச்சிராப்பள்ளி, திருவாரூர்-அகஸ்தியம்பள்ளி, திருவாரூர்-காரைக்குடி, திருவாரூர்-விழுப்புரம், திருவாரூர்-பட்டுக்கோட்டை ஆகிய ஐந்து ரயில்கள் தினசரி இயக்கப்படவுள்ளதாக ரயில்வே வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவாரூர், மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி கேசிசியின் பதான் பாய்ஸ் நண்பர்கள் சங்கம் சார்பில் முப்பதாம் ஆண்டு மின்னொளி சுழற்கோப்பைக்கான சூப்பர் “8” கிரிக்கெட் போட்டி விழா வரும் 27.04.24 (ஞாயிற்றுக்கிழமை) கருவாக்குறிச்சி அரசினர் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி அடுத்த வேளூர் பாலத்தடியில் நேற்று வீச்சரிவாளை காட்டி மக்களை மிரட்டிய திருத்துறைப்பூண்டி, கீழத்தெரு, மீனாட்சி வாய்கால் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், சிறப்பாக செயல்பட்ட போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
திருவாரூர் கடந்த 19.04.24 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் வாக்களித்த இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தினை நாகை தொகுதி இ.கம்யூ.கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். வேட்பாளருடன் வாக்கு சாவடி முகவர்கள் உடனிருந்தனர்.
வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஆட்டுக்கொல்லி நோய் தாக்கி வருகிறது. இந்த நோயிலிருந்து ஆடுகளை பாதுகாக்க கால்நடை பராமரிப்ப துறையால் வரும் ஏப்.,29 முதல் மாவட்டதில் உள்ள 2.70 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆடு வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று தமிழக அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற மாவட்டத்தில் உள்ள 15 வயது முதல் 35 வயது வரை உள்ள சமூக சேவை செய்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு 04366–290620 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மே மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் அறிக்கை செய்த பணிபுரிந்து வரும் 19 நேரடி பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு, திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேற்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரைகளை வழங்கினார். இதில் கூடுதல் கண்காணிப்பாளர் ஏ.பிலிப்ஸ், தனிப்பிரிவு ஆய்வாளர் பி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடப்பு கல்வியாண்டில் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த SC/ST மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் என் கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த பணிமனை பயிற்சி முகாம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் வடுவூர் சோழன் உடற்பயிற்சி மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மன்னார்குடி -தஞ்சாவூர் சாலையில் உள்ள வடுவூர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட அமைச்சூர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.