Thiruvarur

News May 4, 2024

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாணவர்கள்

image

சிங்கப்பூரில் நடைபெற்ற 137 “செஞ்சில் ஸ்ட்ரீட்” எனும் இடத்தில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஶ்ரீ பதஞ்சலி யோகா பயிற்சி மையம் மாணவி ரிதண்யா தங்கப்பதக்கம் வென்றார் இந்தியா, அமெரிக்கா நேபாளம், பூட்டான், ஸ்ரீலங்கா, மலேசியாவைச் சேர்ந்த 400 பேர் பங்கேற்றனர். தமிழக மாணவர்கள் 5 இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

News May 4, 2024

பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்

image

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நீடாமங்கலத்தில் பத்மஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.

News May 3, 2024

திருவாரூர்: ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹர்பன் பேங்க் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் முனைவர். ராஜ கணேசனுக்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களை போட்டித் தேர்விற்கு தயார் செய்ததை பாராட்டும் விதமாக ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் சார்பிலும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

News May 3, 2024

வாராந்திர காவத்து பயிற்சி – பார்வையிட்ட மாவட்ட எஸ்பி

image

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மோப்ப நாய் படை பிரிவினர்கள் கொண்டு வெடிப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறியும் ஒத்திகை நிகழ்ச்சி காவலர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. அதனை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மோப்ப நாய் பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
கவாத்து பயிற்சியின் போது அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள் அப்போது, ஆயுதப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்

News May 3, 2024

திருவாரூர் பாஜக ஒன்றிய தலைவர்கள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட பாஜக ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரபாரிகள் கூட்டம் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி நீடாமங்கலம் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் கொரடாச்சேரி ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News May 3, 2024

நீட் மாதிரி தேர்வு – மாவட்ட கல்வி அலுவலர் பார்வை

image

வருகின்ற 5 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் பயிற்சி வகுப்பு மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த மாணவர்களுக்கு மாதிரி தேர்வு மன்னார்குடி அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

News May 3, 2024

 33 மோட்டார் பறிமுதல்

image

முத்துப்பேட்டையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து பேரூராட்சி சார்பில் 18 பேரூராட்சியிலிருந்து வந்த செயல் அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் இன்று 18 வார்டுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் இதில் 33க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டிருந்த 32 சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

முழுவதுமாக சாலை அமைக்க மக்கள் போராட்டம்

image

மன்னார்குடி 15 வது வார்டு கனகசபை பிள்ளை தெருவில் 200 மீ நீளம் தார் சாலை போடும் பணி இன்று தொடங்கியது. இந்நிலையில் 100 மீ மட்டுமே சாலை அமைக்கப்படும் என தகவல் வெளியானதால் தெருவாசிகள் சாலை அமைக்கும் இயந்திரங்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் 200 மீட்டர் தார் சாலை அமைக்கப்படும் என உறுதியாக தெரிவித்த பின் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.

News May 2, 2024

திருவாரூர்: தொழிலாளர் தின நிகழ்வில் அமைச்சர்

image

மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் உள்ள கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்து அலுவலகத்தில் தொ.மு.ச.சாா்பில் நேற்று நடைபெற்ற தொழிலாளா் தின நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்துகொண்டார். அப்போது, “திமுக ஆட்சியில் தொழில் மூதலீடு மூலம் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

News May 2, 2024

பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர்

image

மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுப்பாலத்தை அகற்றி அகலமான கான்கிரீட் பாலம் கட்ட தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பழைய குறுகிய கம்பி பாலம் உடைத்தெடுக்கும் பணி முடிவுற்றது. தற்போது புதிய அகலமான பாலம் கட்டும் பணி விவரங்களை தொழில் துறை அமைச்சர் ராஜா இன்று நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். நகரமன்ற தலைவர் சோழராஜன் நகரசெயலாளர் வீரா கணேசன் உடனிருந்தனர்.

error: Content is protected !!