India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அலுவலக கூட்ட அரங்கில் (14-10.2024) இன்று இரவு 9.45 மணி அளவில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) கனமழை எச்சரிக்கையும், அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) அதி கனமழை எச்சரிக்கையும் (ரெட் அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பட்டா மாறுதல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ அவர்களிடம் மனுக்களை வழங்கினர். இந்த நிகழ்வில் ஏராளமான அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் நவம்பர் 9-10, 23-24, ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். மேலும் 2025 ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்எல்ஏ கூறுகையில்: மோடி அரசு மத்தியில் அமைந்த பிறகு தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தில் நல்ல வேலையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. இந்த விபத்துகள் குறித்து ஆய்வு செய்து இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்த்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த மூன்று நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் மூன்று நாட்களில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 102 நபர்களை கைது செய்தும், குடி போதையில் வாகனம் ஓட்டிய 80 நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவாரூர், இடையூரை அருகே மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சந்திர மோகன். இவர் தனது வீட்டில் இருந்து காரில் வந்து கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமிருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்த நிலையில் உடனடியாக அக்கம் பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து, அதில் பயணித்த மூவரையும் மீட்டனர். இதுகுறித்து இடையூறு காவல்துறை விசாரணை செய்து வருகிண்டனர்.
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 23, 24 ஆகிய தேதிகளில், திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் பங்குபெற அந்தந்த பள்ளி கல்லூரி மாணவ – மாணவியர்கள் கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் இன்று போலீசார் நடத்திய சோதனையில் மேலவாடியக்காடு வைரமுத்து, ஆதிச்சபுரம் ஆகாஷ், பாமணி ஜெகதீஸ், கீழப்பனையூர் கணபதி, பாமனி வில்சன், உள்ளூர் வட்டம் அய்யப்பன் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.